பதிவு செய்த நாள்
19 ஜன2019
07:00
சென்னை : கொம்பாரிபை, ‘ஆப்’ நிறுவனம், ‘ஐரெப் ஆப்’ நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ‘சீனி லேப்ஸ்’ நிறுவனத்தின், கொம்பாரிபை ஆப், சிறந்த மொபைல் போன், பிராட்பேண்டு, டி.டி.எச்., சேவைகளை வழங்கும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது.பெங்களூரைச் சேர்ந்த, ஐரெப் ஆப் நிறுவனம், மொபைல் போனில், ‘ப்ரீபெய்டு’ ரீசார்ஜ், பேலன்ஸ் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
கொம்பாரிபை ஆப் நிறுவனத்துடன் இணைந்துள்ளதன் மூலம், இனி, ஐரெப் வாடிக்கையாளர்கள், மொபைல் போன் போஸ்ட்பெய்டு, பிராட்பேண்டு, டி.டி.எச்., சேவைகளில், சிறப்பாக உள்ள நிறுவனங்களை அறிந்து, தேர்வு செய்யும் வசதியை பெறுவர்.இந்த இணைப்பு நடவடிக்கை, ரொக்கப் பரிமாற்றத்தில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அது குறித்த விபரங்களை, சீனி லேப்ஸ் வெளியிடவில்லை.
கொம்பாரிபை, விரைவில் பொழுதுபோக்கு துறையில் களமிறங்கி, சிறந்த திரைப்படங்கள், ‘டிவி’ நிகழ்ச்சிகள், குறும் படங்கள் உள்ளிட்ட தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|