குவிண்டாலுக்கு ரூ.200   சர்க்கரை விலை உயர்வு குவிண்டாலுக்கு ரூ.200 சர்க்கரை விலை உயர்வு ...  ஏற்றுமதி ரூ.1.84 லட்சம் கோடி ஏற்றுமதி ரூ.1.84 லட்சம் கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் பத்திர வெளியீட்டில் ரூ.4.57 லட்சம் கோடி வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
23:42

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின், முதல், 10 மாதங்களில், தனிப்பட்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, 4.57 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன.


நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக விரிவாக்கம், நடைமுறை மூலதனம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, தனிப்பட்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்கின்றன.வங்கி, மியூச்சுவல் பண்டு, காப்பீடு உள்ளிட்ட, குறிப்பிட்ட துறைகளுக்காக, இவ்வகை கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.


இந்த வகையில், நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், பல நிறுவனங்கள், 1,955 கடன் பத்திர வெளியீடுகள் மூலம், 4 லட்சத்து, 87 ஆயிரத்து, 764 கோடி ரூபாய் திரட்டி உள்ளன. இந்த வெளியீடு, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 2,200 ஆக இருந்தது.கடந்த முழு நிதியாண்டில், நிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திர வெளியீடுகள் மூலம், 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டின.


மேலும் அதிகரிக்கும்


வழக்கம் போல, நடப்பு நிதியாண்டிலும், கடன் பத்திர வெளியீடுகளில், நிதி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் வெளியீட்டின் மூலம், நிறுவனங்கள் அவற்றின் நிதியாதாரத்தை பெருக்கிக் கொள்கின்றன.


வரும், ஏப்., 1 முதல், ஒரு நிதியாண்டில், ஒரு நிறுவனம் திரட்டும் நீண்ட கால கடனில், குறைந்தது, 25 சதவீதம், கடன் பத்திர வெளியீடுகள் மூலம் பெற வேண்டும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.அதனால், வரும் நிதியாண்டில், நிறுவனங்களின் தனிப்பட்ட கடன் பத்திர வெளியீடும், திரட்டும் நிதியும் மேலும் அதிகரிக்கும்.முகுந்த் ரங்கநாதன், செயல் இயக்குனர் மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)