பதிவு செய்த நாள்
18 மார்2019
23:32

புதுடில்லி: மருத்துவ பரிசோதனை நிறுவனமான, ‘டிரான்ஸ்ஆசியா பயோமெடிக்கல்ஸ்’ நிறுவனம், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், உலகளவில், மருத்துவ உபகரணங்களுக்கான, 4 லட்சத்து, 90 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையில் நுழைய திட்டமிடுகிறது.
இது குறித்து, இந்தநிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான, சுரேஷ் வஸிரானி கூறியதாவது: உலகளவில் நிறுவனத்தை வேகமாக விரிவுப்படுத்த விரும்புகிறோம்.அதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், பங்கு வெளியீட்டுக்கு வருவது என, தீர்மானித்து உள்ளோம்.
நடப்பு நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட இருக்கிறோம். இதில், உள்நாட்டின் பங்கு, 850 கோடி ரூபாயாக இருக்கும். பரிசோதனை சாதனங்களுக்கான இந்திய சந்தையின் மதிப்பு, 7,000 கோடி ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்நிறுவனம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள, 18 நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|