வருமான வரி படிவம் – 16ல் மாற்றம்; வரி ஏய்ப்பை தடுக்க கூடுதல் விபரங்கள் சேர்ப்புவருமான வரி படிவம் – 16ல் மாற்றம்; வரி ஏய்ப்பை தடுக்க கூடுதல் விபரங்கள் ... ...  இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ...
பி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் நிறுவனத்தின் ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
04:34

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல் சேவையில், பதிவிறக்க வேகம் அதிகரித்துள்ளதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

மொபைல் போன் சேவை குறித்து, ஆய்வு நிறுவனமான ஓபன்சிக்னல் வெளியிட்டுள்ள அறிக்கை:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொபைல்போன் சார்ந்த அகண்ட அலைவரிசை சேவையின் தரம் உயர்ந்துள்ளது. முன்னர் இருந்ததை விட, மொபைல் போனில் படங்கள், தரவுகள் ஆகியவற்றின் பதிவிறக்க வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின், ‘4ஜி’ தொழில்நுட்பத்திலான அகண்ட அலைவரிசை சேவை கிடைக்காததால், நுகர்வோர் அனுபவத்தில், போட்டியாளர்களை விட, பின்தங்கியுள்ளது.

இதன், ‘3ஜி’ சேவையில், கடந்த ஆறு மாதங்களில், பதிவிறக்க வேகம், 7 சதவீதம் அதிகரித்து உள்ளது. மொபைல் போனில், சராசரி பதிவிறக்க வேகத்தில், பார்தி ஏர்டெல், 1 வினாடிக்கு, 8.7 மெகாபிட் திறனுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ, 6.3 எம்.பி.பி.எஸ்., வோடபோன், 5.9 எம்.பி.பி.எஸ்., மற்றும் ஐடியா, 5.4 எம்.பி.பி.எஸ்., ஆகியவற்றுடன் உள்ளன. அதிக அளவில், ‘4ஜி’ சேவை பயன்பாட்டில், ரிலையன்ஸ் ஜியோ, 97.5 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, பார்தி ஏர்டெல், 85.6 சதவீதம்; ஐடியா, 77 சதவீதம்; வோடபோன், 76.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

மொபைல் போனில், படங்கள், தரவுகள் ஆகியவற்றின் பதிவேற்ற வேகத்தில், ஐடியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி, ஜூன் 16-–கடந்த மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை, ஆறு ... மேலும்
business news
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிலகங்களுக்கான வரிச் சலுகைகளை, 2020 மார்ச் மாதத்துக்குப் ... மேலும்
business news
­புது­டில்லி:நாட்­டின், கச்சா உருக்கு உற்­பத்தி, மே மாதத்­தில், 5.2 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து, ... மேலும்
business news
­புது­டில்லி:வரப்­போ­கும் பட்­ஜெட்டை முன்­னிட்டு, தக­வல் தொழில்­நுட்­பம், ஸ்டார்ட் அப் உள்­ளிட்ட துறை­க­ளைச் ... மேலும்
business news
புதுடில்லி:தொழில் துறை – அரசு இடையே, நம்பிக்கை குறைபாடுகள் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)