கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம் கடன் வாங்குவதில் மாநிலங்கள் முதலிடம் ...  முதலீட்டு பார்வைகள் மாற வேண்டும் முதலீட்டு பார்வைகள் மாற வேண்டும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எதிர்­பா­ரா­மல் ஏற்­படும் செல­வு­களை சமா­ளிக்­கும் வழி­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
06:49

குடும்ப செல­வு­களை திட்­ட­மிட்டு மேற்­கொண்­டா­லும், சில நேரங்­களில் எதிர்­பா­ராத செல­வு­கள் சிக்­கலை ஏற்­ப­டுத்­த­லாம். மருத்­துவ தேவை, வேலை இழப்பு, பரா­ம­ரிப்பு என, பல காரணங்களால் எதிர்­பா­ராத செல­வு­கள் ஏற்­ப­ட­லாம். இந்த செல­வு­கள் தவிர்க்க இய­லா­த­வை­யாக அமை­யும் போது, அவற்றை சமா­ளிப்­ப­தற்­கான வழி­கள் இதோ:

உதவி கேளுங்­கள்: ‘எமர்­ஜென்சி பண்ட்’ எனப்­படும், அவ­சர கால நிதியை உரு­வாக்கி இருந்­தால், எதிர்­பா­ராத செல­வு­களை சமா­ளிக்க நீங்­கள் அல்­லாட வேண்­டி­யி­ருக்­காது. ஆனால், அத்­த­கைய நிதி இல்­லாத போது, நிலை­மையை சமா­ளிக்க நண்­பர்­கள் அல்­லது நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் உதவி கேட்­க­லாம். நிலைமை சீரா­ன­வு­டன், பணத்தை திரும்பி தந்­து­வி­டு­வேன் என, உறுதி அளிக்­க­லாம்.

முத­லீட்டை விற்­பது: அவ­சர தேவைக்­காக, முத­லீட்டை விற்­பது ஏற்ற வழி அல்ல. எனி­னும், மிக­வும் அவ­சர தேவை எனில், கைவ­சம் உள்ள வளத்தை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ள­லாம். ஆனால், முத­லீட்டை ரொக்­க­மாக மாற்­றும் போது, அதற்­கான செல­வு­களை பரி­சீ­லித்து கவ­ன­மாக முடிவு செய்­ய­வும். நிலைமை சீரா­ன­வு­டன் முத­லீட்டை புதுப்­பிக்க வேண்­டும்.

குறைந்த வட்டி கடன்: கைவ­சம் போது­மான ரொக்­கம் இல்­லாத நிலை­யில், எதிர்­பா­ராத செல­வு­கள் ஏற்­பட்­டால், குறைந்த வட்­டி­யி­லான கடன் பெறும் வாய்ப்பை பரி­சீ­லிக்­க­லாம். கடன் வச­தியை அடிக்­கடி நாடும் பழக்­கம் இல்­லா­த­வர்­கள் எனில், அவ­சர தேவைக்­காக குறைந்த வட்டி கடனை நாடு­வது, இன்­னும் ஏற்­ற­தாக இருக்­கும்.

விற்­பனை வழி: எதிர்­பா­ராத செல­வால் திகைத்து போய்­விட வேண்­டாம். அதை சமா­ளிக்­கும் வழி­கள் உங்­க­ளி­டமே இருக்­க­லாம். நீங்­கள் அதி­கம் பயன்­ப­டுத்­தாத மதிப்பு மிக்க பொருட்­கள் ஏதே­னும் இருந்­தால், அவற்றை விற்று செலவை சமா­ளிக்­க­லாம். மறு விற்­பனை இணை­ய­த­ளங்­கள் மூலம் இவற்றை விற்­க­லாம்.

பட்­ஜெட் வழி: எதிர்­பா­ராத செல­வு­களை சமா­ளிக்க முயற்­சிக்­கும் நிலை, உங்­கள் செலவு பழக்­கங்­களை கண்­கா­ணித்து, குடும்­பத்­திற்­கான பட்­ஜெட்டை உரு­வாக்கி கொள்­வ­தற்­கான சரி­யான நேர­மா­கும். தேவை­யில்­லாத வீண் செல­வு­களை குறைத்­து, அவ­சர கால நிதியை உரு­வாக்க முயற்­சிக்­க­வும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)