பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முன்னணி நிறுவனங்கள் முயற்சி பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முன்னணி நிறுவனங்கள் முயற்சி ...  இனி சொந்த காலில் தான் நிற்கணும் இனி சொந்த காலில் தான் நிற்கணும் ...
அரசே உச்சபட்சம், ரிசர்வ் வங்கி ஓர் அங்கமே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
02:45

புதுடில்லி: அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பெரிதாக எந்த கருத்து மோதல்களும் இல்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

மேலும், அரசே உச்சபட்சமானது என்றும், ரிசர்வ் வங்கி அரசின் ஓர் அங்கமே என்றும் தெரிவித்து உள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, அவர் பேசியதாவது:அரசுக்கும், நிதி அதிகார அமைப்புகளுக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான். இது, எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடியது தான்.தன்னாட்சிஆனால், கருத்து வேறுபாடுகள் குறித்து கலந்து பேசுவது, ஆலோசிப்பது என்பதன் மூலம் அவற்றை தீர்ப்பது மிகவும் அவசியமானது.அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிறைய பேச்சுகள் நடந்துள்ளன. ஆனால், இதுவரை இறுதி முடிவை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி தான் எடுத்து வருகிறது. முடிவு எடுப்பதில், 100 சதவீத தன்னாட்சியுடன் இருக்கிறது, ரிசர்வ் வங்கி. இதுவரை நான் முடிவெடுப்பதில் யாரும் தலையிட்டதில்லை.அரசுக்கும், மத்திய வங்கிக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் இருப்பின், ஒருவரின் நிலையை மற்றவருக்கு விளக்குவது அவசியம். இது இணக்கமான, ஆரோக்கியமான ஓர் உறவை உருவாக்கும் என கருதுகிறேன்.அரசுடனான கலந்தாலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் தடுக்கப்பட முடியாதது. ஏனெனில், அரசே உச்சபட்சமானது. ரிசர்வ் வங்கி அதில் ஒரு அங்கமே.

இதை புரிந்து கொள்ள வேண்டும்.மாற்றுக் கருத்துரிசர்வ் வங்கி, யாரையும் சந்தோஷப்படுத்தும் அமைப்பல்ல. ஆனால் சிலர், அரசை ரிசர்வ் வங்கி சந்தோஷப்படுத்தக் கூடாது என்கின்றனர். அவர்களுக்கு ஒரு கேள்வி. அப்படியென்றால், ரிசர்வ் வங்கி பொருளாதாரம் சம்பந்தமாக அரசுக்கு விரிவுரையாற்ற வேண்டும் அல்லது துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்கிறீர்களா?அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே, பல்வேறு விஷயங்களில் மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன; இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அதை நாங்கள் பொது வெளியில் பேசுவதில்லை; உள்ளுக்குள், இரு தரப்புக்கும் இடையே மட்டுமே பேசிக் கொள்கிறோம்.ஆனால், இதை விட்டு விட்டு, ஒவ்வொரு சின்ன பிரச்னைகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் ஊடகங்களை சந்தித்து, அரசுக்கு இடையேயான வேறுபாட்டை அறிக்கையாக கொடுப்பதில் என்ன லாபம்? அதன் மூலம் என்ன சாதித்து விட முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.வளர்ச்சி அதிகரிக்கும்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டிலிருந்து அதிகரிக்கும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இதன் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, முதல் காலாண்டில் இருந்ததை விட, இரண்டாவது காலாண்டிலிருந்து அதிகரிக்க துவங்கும்.அரசு, தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. குறிப்பாக, அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பு, மிகவும் துணிச்சலான நடவடிக்கை. இந்த நடவடிக்கை, அனைத்து துறையினருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக நிச்சயம் இருக்கும். அடுத்து வரும் காலகட்டங்களில், வரக்கூடிய புள்ளி விபரங்களைப் பொறுத்து, ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : ரிசர்வ் வங்கியின், அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை ... மேலும்
business news
வாஷிங்டன் : இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, அந்நாட்டின் மூதலீடுகளை அதிகரிக்க உதவும் ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், வணிகர்கள் அதிக லாபத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழகத்தில் ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன சில்லரை விற்பனை, 20.1 சதவீதம் சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)