தவறான தகவல்: பிரமல் நிறுவனம் புகார்தவறான தகவல்: பிரமல் நிறுவனம் புகார் ...  ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி ...
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரி்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2019
23:34

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 4.8 சதவீதமாக இருந்தது.

தொழில்துறை உற்பத்தி, மின் உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல் திறனால், ஆகஸ்ட் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி, 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில், தயாரிப்பு துறை, 77 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது.


இத்துறையானது, ஆகஸ்ட் மாதத்தில், 1.2 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இதுவே, 5.2 சதவீதமாக அதிகரித்திருந்தது.மின் உற்பத்தியை பொறுத்தவரை, மதிப்பீட்டு காலத்தில், 0.9 சதவீதமாக சரிவை கண்டு உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 7.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.


சுரங்க துறையின் வளர்ச்சி, மதிப்பீட்டு காலத்தில், பெரிய மாறுதல்களின்றி, 0.1 சதவீதமாக உள்ளது.நடப்பு ஆண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 2.4 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், 5.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)