வீட்டுக்கடன் பெறுவதற்கு பொருத்தமான நேரமா இது? வீட்டுக்கடன் பெறுவதற்கு பொருத்தமான நேரமா இது? ...  முயற்சிகளின் முடிவு எப்படிஇருக்கும்? முயற்சிகளின் முடிவு எப்படிஇருக்கும்? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
00:00

கச்சா எண்ணெய்

மூன்று வார தொடர் சரி­வுக்­குப் பின், கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம், பேர­லுக்கு, 3 டாலர் உயர்ந்து வர்த்­த­கம் நடை­பெற்­றது.

கடந்த வெள்­ளி­யன்று, கச்சா எண்­ணெய் ஏற்றி வந்த, ஈரான் நாட்­டின் கப்­பல், சிவப்­புக் கடல் பகு­தி­யில் ஏவு­கணை தாக்­கு­த­லுக்கு ஆளா­னது. இதன் கார­ண­மாக, வார இறுதி நாட்­களில் விலை உயர்ந்து காணப்­பட்­டது.கடந்த, 15 மாதங்­க­ளாக நடை­பெற்று வரும், அமெ­ரிக்க – சீன வர்த்­தக மோத­லால், இரு நாடு­களும் பெரு­ம­ள­வி­லான வர்த்­தக வாய்ப்­பு­களை இழந்­துள்­ளன. இத­னால், முத­லீட்டு பொருட்­க­ளின் விலை கடு­மை­யான பாதிப்­புக்கு உள்­ளாகி இருக்­கிறது.


இச்­சூ­ழ­லில், இரு நாட்டு பிர­தி­நி­தி­க­ளின்பேச்­சு­க­ளால் ஏதே­னும் சுமுக உடன்­ப­டிக்கை
ஏற்­ப­ட­லாம் என்ற கருத்து நிலவி வரு­கிறது. இது­வும், கச்சா எண்­ணெய் விலை உயர
கார­ண­மாக அமைந்­தது.ஆசிய, அமெ­ரிக்க, ஐரோப்­பிய பங்­குச் சந்­தை­கள் தொடர் வீழ்ச்­சி­யில் வர்த்­த­க­மாகி வரு­கின்­றன. இத­னால், பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­மாக இருக்­கும் என்ற
கண்­ணோட்­டம் ஏற்­பட்­ட­தால் அது, எண்­ணெய் விலைக்கு பாத­க­மாக அமைந்­தது.

அமெ­ரிக்­கா­வின், ‘ஷெல்’ கச்சா எண்­ணெய் உற்­பத்தி தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம்
உள்­ளது. அங்கு இயங்கி வரும் ஆழ்­கு­ழாய் கிண­று­க­ளின் எண்­ணிக்கை, கடந்த மூன்று
ஆண்­டு­களில் அதி­க­ரித்து, தற்­போது, 892 எண்­ணெய் குழாய்­கள் இயங்கி வரு­கின்­றன.இதை­ய­டுத்து, தின­சரி எண்­ணெய் உற்­பத்தி, 1 லட்­சம்பேரல்­கள் அதி­க­ரித்து, மொத்த உற்­பத்தி தின­சரி, 1.14 கோடி பேரல்­கள் என்ற அள­வில் பெருகி வரு­கிறது.அதி­க­ரித்து வரும் உற்­பத்தி, தேவை குறை­வால் ஏற்­பட்­டுள்ள இருப்பு அதி­க­ரிப்பு போன்ற
கார­ணங்­க­ளால், விலை ஏற்­றம்கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்டு, விலை சரிந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது.உலக அள­வில், தின­சரி உற்­பத்­தி­யில், அமெ­ரிக்கா, அதன் ஷெல் எண்­ணெய்
உற்­பத்­தி­யு­டன் சேர்த்து, முத­லி­டம் வகிக்­கிறது. இரண்­டா­வ­தாக சவுதி அரே­பி­யா­வும்,
மூன்­றா­வ­தாக ரஷ்­யா­வும் உள்­ளன.


அமெ­ரிக்­கா­வில் இயங்கி வரும் ஆழ்­கு­ழாய் கிண­று­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து
அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. தற்­போது, 892 குழாய்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. 2015, மார்ச் மாதத்­துக்­குப் பிறகு இதுவே அதி­க­மா­கும்.உலக நுகர்வு தேவை­யில், 60 சத­வீ­தத்தை, சவுதி அரே­பியா, ரஷ்யா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளின் மொத்த உற்­பத்தி பூர்த்தி செய்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.


தங்கம் வெள்ளி


கடந்த வாரத்­தின் இறுதி நாட்­க­ளான, வியா­ழன் மற்­றும் வெள்ளி ஆகிய நாட்­களில், 2
சத­வீ­தத்­துக்கு மேல், தங்­கம் மற்­றும் வெள்­ளி­யின் விலை­யில் சரிவு ஏற்­பட்­டது.சமீப கால­மாக, அமெ­ரிக்கா – சீனா இடையே நடை­பெற்று வரும் வர்த்­தக மோதல், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை­யில், பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

வர்த்­தக மோதல் போக்­கால், பொரு­ளா­தார வளர்ச்சி குறைவு ஏற்­படும் என்ற
கண்­ணோட்­டத்­தில், முத­லீட்­டா­ளர்­க­ளின் பார்வை, தங்­கத்­தின் பக்­கம் திரும்­பி­யது. இதன்
கார­ண­மாக, கடந்த சில மாதங்­க­ளாக தங்­கத்­தின் விலை அதி­க­ரித்து வந்­தது.தற்­போது, இரு நாடு­க­ளுக்­கும் இடையே நடை­பெ­றும் பேச்­சால், சுமுக உடன்­பாடு ஏற்­படும் எதிர்­பார்ப்­பில், தங்­கத்­தின் விலை சரிந்து வர்த்­த­க­மா­கி­யது. மேலும், வியா­பா­ரி­க­ளின் லாப­மீட்­டும்
நோக்­கத்­தால் செய்த விற்­பனை கார­ண­மா­க­வும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம் சரிந்து வர்த்­த­க­மா­கி­யது.

தங்­கம் எப்­போ­தும் முத­லீட்டு பொரு­ளா­கவே கரு­தப்­ப­டு­கிறது. உலக அள­வில், சொல்­லப்­ப­டாத நாண­ய­மாக தங்­கம் விளங்­கு­கிறது.இச்­சூ­ழ­லில், அமெ­ரிக்­கா­வின் வட்டி விகி­தம்
குறை­யும் என்ற எதிர்­பார்ப்­பி­லும், பொரு­ளா­தா­ரத்­தின்மந்­த­நிலை கார­ண­மா­க­வும், அந்­நாட்­டின் அரசுகரு­வூ­லங்­க­ளின் ஆதா­யம், 1.75 சத­வீ­த­மாக குறைந்­தது. இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளது முத­லீ­டு­களை தங்­கத்­தின் மீது திருப்­பி­னர்.மேற்­கூ­றிய கார­ணங்­க­ளால், கடந்த சில கால­மாக, தங்­கம் விலை உயர்ந்து வரு­கிறது. குறிப்­பாக, கடந்த நான்கு மாதங்­க­ளாக, விலை உயர்ந்து வரு­கிறது.


ஜி.எப்.எம்.எஸ்., நிறு­வ­னம் நடத்­திய, உலக தங்க உற்­பத்தி கருத்­துக் கணிப்பு நில­வ­ரத்­தில், சீனா தொடர்ந்து முத­லி­டம் வகித்து வரு­கிறது. சீனா­வின் மொத்த உற்­பத்தி, 426 டன்.
இரண்­டா­வ­தாக ஆஸ்­தி­ரே­லியா, 275 டன் உற்­பத்தி செய்­கிறது. மூன்­றா­வ­தாக ரஷ்­யா­வின் உற்­பத்தி, 270 டன். உலக நாடு­க­ளின் மொத்த உற்­பத்­தி­யா­னது, 2017ல், 3,247 டன் ஆக இருந்­தது. இது, 2016ம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 5 டன் குறை­வா­கும்.


டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வர்த்­த­மாகி வரும் சூழ­லில், உள்­நாட்டு ஆப­ரண சந்­தை­யில் தங்­கம் விலை, கடந்த சில வாரங்­க­ளாக உயர்ந்து காணப்­பட்­டது.செப்­டம்­பர் மாதத்­தில், இந்­தி­யா­வின் மொத்த தங்­கம் இறக்­கு­மதி, கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 14 சத­வீ­தம் சரிந்­துள்­ளது. இதற்கு ரூபா­யின் மதிப்பு இழப்பு முக்­கிய
கார­ண­மா­கும். சரா­ச­ரி­யாக ஓராண்­டில், 800 முதல், -900 டன் தங்­கம் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

செம்பு


செம்பு விலை, கடந்த வாரம் அதி­க­ரித்து வர்த்­த­கம் ஆனது. அமெ­ரிக்க – சீன நாடு­க­ளுக்கு இடையே நிலவி வரும் வர்த்­தக மோதல், முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இம்­மாத இறு­தி­யில், சீன அதி­கா­ரி­கள், அமெ­ரிக்க பய­ணம் மேற்­கொண்டு பேச்சு நடத்த
உள்­ள­னர். இதில் ஏற்­படும் சுமுக முடி­வு­கள், இரு நாடு­க­ளின் பொரு­ளா­தார வளர்ச்­சியை
ஊக்­கு­விக்­கும் என கரு­தப்­ப­டு­கிறது.இதன் கார­ண­மாக, தொழிற்­சாலை தேவை கூடும் என்ற எதிர்­பார்ப்­பில் செம்பு விலை உயர்ந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. எல்.எம்.இ., பொருள் வாணிப சந்­தை­யில், செம்பு இருப்பு விப­ரம்
கடு­மை­யாக குறைந்­த­தும் சந்­தைக்கு சாத­க­மாக அமைந்­தது.உலக அள­வில், செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது. சீனா­வின் தேவை மற்­றும் இறக்­கு­மதி, செம்­பின் விலை­யில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும். கடந்த சில மாதங்­க­ளாக, இந்­நாட்­டின் நுகர்வு தேவை
குறைந்­த­தன் கார­ண­மாக, செம்பு விலை கடு­மை­யாக சரிந்­துள்­ளது.வரும் நாட்­களில்
இத்­த­கைய போக்கு கட்­டுக்­குள் கொண்டு வரப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 14,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)