வீட்டுக்கடன் பெறுவதற்கு பொருத்தமான நேரமா இது? வீட்டுக்கடன் பெறுவதற்கு பொருத்தமான நேரமா இது? ...  முயற்சிகளின் முடிவு எப்படிஇருக்கும்? முயற்சிகளின் முடிவு எப்படிஇருக்கும்? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
00:02

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’ கடந்த வாரம் அதி­கப்­ப­டி­யான ஏற்­றத்­தாழ்­வு­டன் காணப்­பட்­டது. வார நாட்­களில் சரிந்து வர்த்­த­கம் ஆன­போ­தி­லும், வார இறு­தி­யில், சற்று உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. வார முடி­வில், 300 புள்­ளி­கள் அதி­க­ரித்து, வர்த்­த­கம் முடி­வுற்­றது.


கடந்த வாரத்­தில், குறிப்­பி­டத்­தக்க விலை­யேற்­றம் காணப்­பட்ட பங்­கு­களில், ‘பார்தி ஏர்­டெல், பிரிட்­டா­னியா, பார்தி இன்ப்ரா டெல் மற்­றும் சிப்லா’ போன்ற பங்­கு­கள், அதி­கப்­ப­டி­யான உயர்வை கண்­டன.மாறாக, ‘யெஸ் பேங்க், கெய்ல், பி.பி.சி.எல்., – ஐ.டி.சி., – ஐ.ஓ.சி., மற்­றும் டாடா கன்­சல்­டன்சி சர்­வீஸ்’ போன்ற பங்­கு­கள், அதி­கப்­ப­டி­யான சரிவை சந்­தித்­தன.


துறை சார்ந்த குறி­யீட்டு எண்­களை பொருத்­த­வரை, எப்.எம்.சி.ஜி., வாக­னத் துறை மற்­றும் வங்­கித் துறை குறி­யீட்டு எண்­கள் தலா, 3 சத­வீ­தத்­துக்கு மேல் உயர்ந்­தது. ஊட­கத் துறை, தொழில் நுட்­பத் துறை, ரியல் எஸ்­டேட் துறை­க­ளின் குறி­யீட்டு எண்­கள், சரிவை கண்­டன.
பங்­குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள, பல முக்­கிய முன்­னணி நிறு­வ­னங்­க­ளின்,
இரண்­டாம் காலாண்­டுக்­கான நிதி அறிக்­கை­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. இதன்
அடிப்­ப­டை­யில், நிறு­வ­னங்­க­ளின் ஆதா­யத்­தில் ஏற்­படும் மாற்­றங்­கள் கார­ண­மாக, சந்­தை­யில் மாற்­றங்­கள் நிக­ழும்.

தனி­யார் பொரு­ளா­தார கருத்­துக் கணிப்பு நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ கடந்த வியா­ழ­னன்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், நடப்பு நிதி­யாண்­டில், இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி, முந்­தைய கருத்­துக் கணிப்­பில் இருந்து, 6.2 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 5.8 சத­வீ­த­மாக குறை­யும் என்று
அறி­வித்­துள்­ளது.


மேலும், கடந்த மாதத்­தில், ஆசிய மேம்­பாட்டு வங்கி மற்­றும் பொரு­ளா­தார செயல்­பாட்டு வளர்ச்சி அமைப்பு போன்ற அமைப்­பு­களும், இந்­திய பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், 50 அடிப்­படை புள்­ளி­கள் அள­வுக்கு வளர்ச்சி குறைவு இருக்­கும் என்று அறி­வித்­துள்­ள­தும் குறிப்­பி­டத்­தக்­கது.
மேலும், கடந்த வாரம் நடை­பெற்ற, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை கூட்­டத்­தில், வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்­ட­து­டன், பொரு­ளா­தார வளர்ச்சி எதிர்­பார்ப்­பும் குறைக்­கப்­பட்டு
இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


இவ்­வா­றாக, பல முன்­னணி நிறு­வ­னங்­க­ளின் கருத்­துக் கணிப்­பு­களும், பொரு­ளா­தார மந்த நிலையை சுட்­டிக்­காட்­டும் வித­மா­கவே உள்­ளன.பொரு­ளா­தார மந்த நிலையை சரிப்­ப­டுத்­தும் வித­மாக, கடந்த மாத இறு­தி­யில், மத்­திய நிதி­ய­மைச்­சர், அனைத்து துறை
நிறு­வ­னங்­க­ளுக்­கும் வரி குறைப்பு அறி­விப்பை வெளி­யிட்­டார். பங்­குச் சந்­தை­களை
பொருத்­த­வரை, நிறு­வ­னங்­க­ளின் ஆதாய எதிர்­பார்ப்பு மற்­றும் வளர்ச்­சி­யின் அடிப்­ப­டை­யில், பங்­கு­களில் ஏற்ற இறக்­கங்­கள் அமை­வது இயல்­பா­கும். இதன் அடிப்­ப­டை­யில் பங்­கு­களில் மாற்­றங்­கள் நிக­ழும்.


டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, கடந்த சில மாதங்­க­ளாக தொடர் சரி­வில் இருந்து வரு­வது, நாட்­டின் இறக்­கு­மதி சுமையை அதி­க­ரிக்­கும் என்­ப­தும், இத­னால் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை கூடும் என்­ப­தும், பொரு­ளா­தார வளர்ச்சி குறை­வ­தற்கு ஒரு கார­ண­மாக அமை­யும்.இந்த வாரத்­தைப் பொருத்­த­வரை, நிப்­டி­யின் ரெசிஸ்­டென்ஸ் 11,390. இதைக் கடக்­கும் நிலை­யில், மேலும் உயர்ந்து, வர்த்­த­க­மாக வாய்ப்­புள்­ளது. அடுத்த ரெசிஸ்­டென்ஸ் 11,445 மற்­றும் 11,510; சப்­போர்ட் 11,235 மற்­றும் 11,150.


முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 14,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)