பதிவு செய்த நாள்
23 ஜன2020
01:29

புதுடில்லி : அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், அன்று பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும் என, மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.வழக்கமாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை தினங்களாகும்.
அன்று, பங்குச் சந்தைகள் செயல்படுவது கிடையாது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1ம் தேதியன்று, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அன்றைய தினம் சனிக்கிழமையாகும்.இந்நிலையில், மத்திய அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, அன்று பங்குச் சந்தைகள் செயல்படும் என, மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.அன்றைய தினம், பங்குச் சந்தைகள் வழக்கம் போலவே, காலை, 9:00 மணியிலிருந்து, மாலை, 3:30 மணி வரை இயங்கும் என்றும், மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கு முன், 2015ம் ஆண்டு, பிப்., 28ம் தேதியன்று, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட்டை தாக்கல் செய்ததை முன்னிட்டு, அன்றைய தினம் சனிக்கிழமையாக இருந்தபோதிலும், சந்தை இயங்கியது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|