பதிவு செய்த நாள்
15 பிப்2020
23:36

புதுடில்லி:தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்பாக, எது வந்தாலும் சமாளிக்க தயாராக இருப்பதாக, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே செலுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், ரஜ்னிஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.தொலைதொடர்பு நிறுவனங்கள், எஸ்.பி.ஐ. வங்கிக்கு, 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை வைத்து உள்ளன. தொலைதொடர்பு நிறுவனங்கள் சிக்கலில் மாட்டியிருப்பதால், அவற்றுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ரஜ்னிஷ் குமார் மேலும் கூறியதாவது:தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். நாங்களும் பேச உள்ளோம். அவர்கள் ஏதேனும் திட்டம் வைத்திருப்பர் என நான் கருதுகிறேன்.நாங்கள், 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறோம். அவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளனர் என்று கேட்க உள்ளோம். எத்தகைய சூழல் இருந்தாலும், அதை கையாளக்கூடிய திறனுடன் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|