பதிவு செய்த நாள்
09 ஏப்2020
22:44
சென்னை:‘ரீசார்ஜ்’ செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு, ரீசார்ஜ் செய்து தரும்
வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு, 6 சதவீதம் வரை, ‘கேஷ்பேக்’ வழங்கப்படும் என, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரடங்கு
உத்தரவால், மொபைல் போன் ரீசார்ஜ் செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால்,
இணைய தளம் வாயிலாக ரீசார்ஜ் செய்ய முடியாமல், வோடபோன் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். அவர்களுக்காக, ‘ரீசார்ஜ் பார் குட்’ என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் படி, வோடபோன் ஐடியா மொபைல் நிறுவன வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்ய
முடியாத, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு, ‘மை வோடபோன் ஆப் அல்லது மை ஐடியா ஆப்’ வாயிலாக, ரீசார்ஜ் செய்து கொடுத்தால், 6 சதவீதம் வரை, கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். இந்த சிறப்பு சலுகை, ஏப்., 30 வரை அமலில் இருக்கும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|