பதிவு செய்த நாள்
14 ஆக2020
22:43
புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஜூலையில், 0.58 சதவீதம் குறைந்துள்ளது. உணவு பொருட்கள் விலை அதிகரித்திருந்த போதும், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.கடந்த ஜூன் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், மைனஸ், 1.81 சதவீதமாக இருந்தது.
மொத்த விலை
மேலும், மே மற்றும் ஏப்ரல் மாதங்களில், முறையே, மைனஸ், 3.37 சதவீதமாகவும், மைனஸ், 1.57 சதவீதமாகவும் இருந்தது.இது குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:மாதந்திர மொத்தவிலை பணவீக்கத்தின் அடிப்படையிலான, ஆண்டு பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில், மைனஸ், 0.58 சதவீதமாக உள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு ஜூலையில், 1.17 சதவீதமாக இருந்தது.உணவுப் பொருட்களின் பணவீக்கம், ஜூலையில், 4.08 சதவீதமாக உள்ளது. ஜூனில் இது, 2.04 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் பணவீக்கம், 9.84 சதவீதம் குறைந்துள்ளது. இது ஜூனில், 13.60 சதவீதமாக அதிகரித்திருந்தது.
பழைய நிலை
தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம், ஜூனில், 0.08 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலையில், 0.51 சதவீதமாக உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜூலையில், 6.93 சதவீதமாக அதிகரித்துஉள்ளது. இதுவே ஜூனில், 6.23 சதவீதமாக இருந்தது.
கடந்த வாரத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வட்டியை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், பழைய நிலை தொடரும் என தெரிவித்தது. மேலும், சில்லரை விலை பணவீக்கம், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|