பதிவு செய்த நாள்
25 செப்2020
22:12
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே சமயம், ஜியோவில், 45 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள் என, டிராய் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, டிராய் மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், ஏர்டெல் நிறுவனம், 48.2 லட்சம் வாடிக்கை யாளர்களையும்; வோடபோன் ஐடியா நிறுவனம், 11.3 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன. ஜியோவில் புதிதாக, 45 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த இந்தியாவின் மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 0.28 சதவீதம் அளவுக்கு சரிந்து, ஜூன் மாத நிலவரப்படி, 114 கோடியாக உள்ளது.மேலும், மாதாந்திர சரிவு விகிதம், நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் முறையே, 0.18 சதவீதம் மற்றும் 0.40 சதவீதமாக உள்ளது.
ஜூன் இறுதி நிலவரப்படி, மொத்த மொபைல் வாடிக்கையாளர்களில், நகரத்தை சேர்ந்தவர்கள் பங்கு, 54.3 சதவீதமாகவும், கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கு, 45.7 சதவீதமாகவும் உள்ளது. மேலும், ஜூன் மாத நிலவரப்படி, வாடிக்கையாளர் எண்ணிக்கை, ஜியோவில், 39.7 கோடியாகவும், ஏர்டெல்லில், 31.6 கோடியாகவும், வோடபோன் ஐடியாவில், 30.5 சதவீதமாகவும் உள்ளது.இவ்வாறு, டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|