பதிவு செய்த நாள்
02 மார்2021
20:50

புதுடில்லி:‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
சூரத்தை சேர்ந்த, ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், சிறப்பு வகை ரசாயனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு, 6 தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம், 760 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, கடந்த டிசம்பர் மாதத்தில் விண்ணப்பித்திருந்தது.பரிசீலனைக்குப் பிறகு, இப்போது, செபி அனுமதி வழங்கி இருக்கிறது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மேலும், பங்கு வெளியீட்டின் போது, ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை, அதன் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, விலை சலுகையுடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|