பதிவு செய்த நாள்
16 ஏப்2021
18:57

புதுடில்லி:மத்திய அரசு பொதுத் துறை வங்கிகள் சிலவற்றை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில், இரண்டு வங்கிகளின் பங்குகளை விற்று வெளியேற முடிவெடுத்திருப்பதாக, பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது என்பது குறித்த அறிவிப்பை விரைவில், நிடி ஆயோக் அறிவிக்கும் என தெரிகிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார்மயமாக்கலுக்கு உட்படுத்த, இரண்டு பொதுத் துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது, நிடி ஆயோக்.
இது குறித்து இதுவரை இரண்டு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.இதற்கிடையே, ரிசர்வ் வங்கியும், வங்கிகள் தனியார்மயமாக்கல் குறித்து, தொடர்ந்து அரசுடம் பேசி வருகிறது. நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு இரண்டு பொதுத் துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் வாயிலாக, 1.75 கோடி ரூபாயை திரட்ட இலக்கு வைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|