பங்குகளை விற்கும்  ‘அமேசான்’ தலைவர் பங்குகளை விற்கும் ‘அமேசான்’ தலைவர் ... காப்பீடு பிரிமியத்தில் 45 சதவீத வளர்ச்சி காப்பீடு பிரிமியத்தில் 45 சதவீத வளர்ச்சி ...
‘செமிகண்டக்டர்’கள் தட்டுப்பாடு கம்ப்யூட்டர் தயாரிப்பதில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
20:33

புதுடில்லி:உலகளவில், மின்னணு பொருட்கள் தயாரிப்பில் மிக முக்கிய பங்காற்றும், ‘செமிகண்டக்டர்’களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் ஆகியவை கிடைப்பது, 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு குறையக்கூடும்.

‘டெக்ஆர்க்’

இருப்பினும், மொபைல் போன் தயாரிப்பில் பெரிய அளவிலான சிக்கல்கள் இப்போது ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள், சந்தை நிபுணர்கள். காரணம், இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, நிறுவனங்கள், போதுமான அளவுக்கு செமிகண்டக்டர்களை வாங்கி சேமித்து வைத்திருக்கின்றன.

‘டெக்ஆர்க்’ எனும் சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் நிறுவனர் பைசல் கவூசாஇது குறித்து கூறியுள்ளதாவது:மார்ச் மாதத்துக்கு முன்பு வரை, செமிகண்டக்டர் பற்றாக்குறை என்பது ஒரு வதந்தி போலவே இருந்தது. நிறைய பிராண்டுகள் பற்றாக்குறை இருப்பதை ஏற்கவில்லை.

ஆனால், மார்ச் மாதத்துக்குப் பின் பெரிய பெரிய பிராண்டு களே பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையும்; அதனால் எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க துவங்கின.

பாதிப்பு

கடந்த ஆண்டு திடீரென அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்படவும், செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துவிட்டது. அதன் பாதிப்பு தொடர்கிறது. இந்த பற்றாக்குறை மேலும் சில காலாண்டுகளுக்கு தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:அண்மையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், மானிய திட்டமான, ‘பேம் ... மேலும்
business news
வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கும், நன்கு நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கும் இடையில், ஒரு இனிப்பான ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தங்க இ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, 57 சதவீதம் சரிவைக் ... மேலும்
business news
புதுடில்லி:ஊரடங்குகள் காரண மாக, மே மாதத்தில் சில்லரை விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, 75 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)