‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல் ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல் ...  விருந்தோம்பல் துறை மார்ச் காலாண்டில் சரிவு விருந்தோம்பல் துறை மார்ச் காலாண்டில் சரிவு ...
மீண்டும் தீவிரமடையும் தனியார்மயமாக்கும் பணிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2021
21:45

புதுடில்லி:தொற்றுநோய் பரவல் பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

ஏர் இந்தியா, பி.பி.சி.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் ஏற்கனவே இறங்கிவிட்ட காரணத்தால், அவற்றை, இந்த நிதியாண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. கொரோனா முதல் பரவல் காரணமாக, இந்த பணிகளை, குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் முடிக்க இயலாமல் போய்விட்டது.

தனியார்மயமாக்கும் பணிகள் குறித்து நேரடியாக பேசவோ, பயணிக்கவோ முடியாத சூழல் உருவாகி விட்டது.ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், இதற்கான பணிகள் மீண்டும் துவங்க ஆரம்பித்துவிட்டது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே ஏர் இந்தியா, பி.பி.சி.எல்., என சில நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணிகள் துவங்கிவிட்டது. அந்த பணிகளை இந்த நிதியாண்டுக்குள் முற்றாக நிறைவேற்ற முயற்சிகள் நடந்துவருகின்றன. மேலும், எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீடும் இந்த நிதியாண்டுக்குள் வந்துவிடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குவிலக்கலை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 32 ஆயிரத்து 835 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:‘டிஜிட்டல்’ மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த உலகளாவிய ஆய்வில், 90.32 சதவீத மதிப்பெண்ணுடன், ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று காரணமாக, ‘ஸ்மார்ட்போன்’கள் விற்பனை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, ஏழாவது மாதமாக அதிகரித்து வருகிறது. நடப்பு மாதத்தில், 21ம் தேதி வரையிலான ... மேலும்
business news
சென்னை:தமிழகத்தில், 20 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கும் போட்டியில் பங்கு ... மேலும்
business news
புதுடில்லி:பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Manian - Chennai,Iran
22-மே-202110:46:35 IST Report Abuse
Manian அப்பாடி, மக்கள் வரிப்பணத்தில் போலி கோட்டா வியாதி வேலையாட்களுக்கு 30-40 ஆண்டுகள் செலவிடும் வரிப்பணமும் மிஞ்சும், தொழில்கள் மூலம் அதிக வரிப்பணமும் வசூலாகுமே அத்தோட, வேலை வாங்கி தாற்றேன்ன மாமூலும் 95% குறையுமே அம்மாடி, இந்தியாவுக்கு நல்ல காலம் பொறக்க 68 வருசமாச்சே கோவில்பட்டி குந்து மணியாச்சி
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)