பதிவு செய்த நாள்
27 மே2021
21:00

நியூயார்க்;சாதாரண இன்டர்நெட் புத்தக நிறுவனமாக இருந்த அமேசானை, இன்றைக்கு மிகப்பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமாக மாற்றி காட்டிய அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஜூலை 5ம் தேதியன்று, தன்னுடைய தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த பொறுப்புக்கு, அமேசானில் உயரதிகாரியாக இருக்கும், ஆண்டி ஜாஸ்ஸி வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கு, சென்டிமென்ட்டாக ஒரு காரணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
27 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1994ம் ஆண்டு இதே தேதியில் தான், அமேசான் பதிவு பெற்ற நிறுவனமாக உருவெடுத்தது என்பதால், இந்த தேதியை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.தற்போது, 57 வயதாகும் பெசோஸ், நிறுவனத்தின் தலைவராக இருந்து, புதிய பொருட்கள் மற்றும் முயற்சிகளில் கவனம் செலுத்த இருக்கிறார்.
மேலும், அவருடைய வேறு சில முயற்சிகளான, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, புளூ ஆரிஜின், ராக்கெட் ஷிப் நிறுவனம் போன்றவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த அறிவிப்புடன் சேர்த்து, அமேசான் நிறுவனம், புகழ்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான, எம்.ஜி.எம்., நிறுவனத்தை, 61 ஆயிரத்து, 685 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமேசானின், ‘பிரைம் வீடியோ’ சேவையில் கூடுதல் நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் வழங்க இயலும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|