தொடர் பங்கு வெளியீட்டில் ‘ருச்சி சோயா’ நிறுவனம் தொடர் பங்கு வெளியீட்டில் ‘ருச்சி சோயா’ நிறுவனம் ...  பங்குதாரர்கள் குறித்த செய்தியால் அதானி பங்குகள் சரிவு பங்குதாரர்கள் குறித்த செய்தியால் அதானி பங்குகள் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்கள் வாங்க புதிய வழிமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
07:43

சென்னை : ஒரு வாகனத்தை வாங்குவது என நாம் முடிவு செய்தால், ஒவ்வொரு ஷோரூமாக ஏறி; இறங்கி, விலை எவ்வளவு என கேட்டு, விசாரித்து, இறுதியில் எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அங்கு, வாங்குவோம்.

இந்த கொரோனா காலத்தில், முன்போல் அப்படி ஒவ்வொரு கடையாக ஏறி; இறங்குவது அவ்வளவு சாத்தியமில்லாததாக இருக்கிறது.அல்லது ஒவ்வொரு நிறுவனத்தின் இணைய தளத்தை அணுகி, விபரங்களை பெற வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜிங்கிள்பிட்’, மின்னணு வணிக தளத்தின் வாயிலாக எளிய தீர்வு வழங்கி உள்ளது. இந்த மின்னணு வணிக தளத்தில், அனைத்து வாகனங்களின் தகவல்கள் மாற்று ஏல அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.


அதாவது, வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட புதிய வாகனத்தை வாங்க இந்த தளத்தில் பதிவிடும்போது, அவர் இருப்பிடத்துக்கு 5 கி.மீ., சுற்றளவில் உள்ள வாகன விற்பனையாளர்கள், அவர்களே முன்வந்து, தங்களுடைய வாகன விலையை அதில் பதிவிடுவார்கள். இதையடுத்து, வாடிக்கையாளர் எந்த முகவர் குறைந்த விலையை குறிப்பிடுகிறாரோ அவரிடம் வாகனத்தை வாங்கிக்கொள்ள முடியும்.வாகன சோதனை ஓட்டம், டெலிவரி தவிர மற்றவை அனைத்தையும் ‘ஆன்லைன்’ வாயிலாகவே முடித்துவிடலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)