பதிவு செய்த நாள்
28 ஆக2021
19:47

புதுடில்லி:செப்டம்பர் 1ம் தேதி முதல், அனைத்து புதிய வாகனங்களுக்கும், ‘பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என, அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதனையடுத்து, புதிய வாகனங்களை வாங்கும்போது, 8 – 10 சதவீதம் வரை அதிக விலை கொடுக்க வேண்டியது வரும் என வாகன முகவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றின் விலை 5 – -6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும், துவக்க நிலை கார்களின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், எஸ்.யு.வி., வாகனங்களின் விலை 2 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.காப்பீட்டுக்கான ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ., கடந்த ஆகஸ்டில் நீண்ட கால காப்பீடு கட்டாயம் என்பதை திரும்ப பெற்றது. ஆனால், தற்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, முகவர்கள் ஐந்து ஆண்டு கால காப்பீட்டையும் சேர்த்தே விற்க வேண்டியுள்ளது. இதனால், புதிய வாகனங்கள் வாங்கும்போது நுகர்வோர் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையிலான காப்பீடு குறித்த நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை, வாகன துறையை சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|