வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ... சேமிப்பு திறனை அதிகரிக்கும் அமேசான் இந்தியா சேமிப்பு திறனை அதிகரிக்கும் அமேசான் இந்தியா ...
‘அமேசான்’ நிறுவனத்துக்கு தடை வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
19:26

புதுடில்லி:முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான, அமேசானுக்கு எதிரான லஞ்சம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான சி.ஏ.ஐ.டி., மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அத்துடன், அமேசான் இணையதளத்தை இடைநிறுத்தவும், விசாரணை நடக்கும் கால கட்டத்தில் அதன் செயல்பாடுகளை நிறுத்தவும் உத்தரவிட வேண்டும் என்றும், சி.ஏ.ஐ.டி., கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அக்கடிதத்தில், இந்த விவகாரம் மிகவும் முக்கியமான ஒன்று என்றும், செல்வாக்கு, துஷ்பிரயோகம், அரசு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு காரியங்கள் சாதிப்பது போன்றவற்றிலிருந்து மின்னணு வர்த்தக சந்தை மற்றும் சில்லரை வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டை அடுத்து, இந்த கடிதத்தை வர்த்தகர்கள் கூட்டமைப்பு எழுதியுள்ளது.இதற்கிடையே, அமேசான் நிறுவனம், லஞ்சம் வழங்கியது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இது போன்ற விஷயங்களை நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 21,2021
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Nagercoil Suresh - India,India
22-செப்-202119:50:16 IST Report Abuse
Nagercoil Suresh இன்னும் 50 ஆண்டுகளுக்கு யாராலும் அமேசான் வளர்ச்சியை தடுக்கவும் முடியாது முந்தவும் முடியாது. அமேசான் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக வலம்வருகிறது. இந்தியாவிலும் மிக அபார வளர்ச்சி அடையும், இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பு 100 சதவீதம் கிடைக்கப்போகிறது அதில் எந்த மாத்து கருத்தும் இல்லை. இந்திய பொருள்களின் தரத்தை உயர்த்தி ஏற்றுமதிக்கு வழிசெய்யும்...பிற்காலங்களில் இதனால் இந்தியாவிற்கு நன்மையே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
M Ramachandran - Chennai,India
21-செப்-202120:21:45 IST Report Abuse
M  Ramachandran போது மக்கள் நமக்கு எது லாபமோ அதை தான் நாம் ஆதரிக்க வேண்டும். கொள்ளைக்கும்பலுக்கு அடி பணிய கூடாது.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
M Ramachandran - Chennai,India
21-செப்-202120:19:01 IST Report Abuse
M  Ramachandran மக்கள் நலம் கருத வியாபாரிகள் சங்கம். இவர்கள் நலம் தான் முக்கியம். இது வரை இவர்கள் பார்த்த லாபத்திற்கு ஆன் லைன் வர்தாகத்தால் கொள்ளை லாபம் பறிபோகுதே என்ற மணவருத்தத்தின் வெளிப்பாடு. சாதாரணமாக அரசாங்கம் கொடுக்கும்ஸ் சலுகையை கலை மக்களுக்கு கொடுக்கிறார்களா? அதையும் தனே லவுத்திரர்கள். விவசாய பொருள்கள் வாஙகுமிடத்திலும் அடிமாட்டு விலைக்கு வாஙஹவ் அது விற்பார் தன்மையிலும் இதை அதை சொல்லி கொள்ளையை அடிப்பது.. அப்போது மக்களுக்கு யார் குரல் கொடுப்பது. சாதாரண பெட்டிக்கடைக்காரங்களெல்லாம் இந்து லதாதிபதியோர் கொடியாதிபதியோ. அரசு விற்கும் பால் பாக்கெட்டில் அதில் அதிக பட்ச விலை போராட்டிருக்கும் அதாஉற்கும்மேலேயே தன விற்பார்கள்.. பக்கத்திலே ஆவின் பால் விற்பனையாளரிடம் பாக்கெட்டில் போட்டிருக்கும் விலைக்கு கிடைக்கும். இப்போர் குயோ முறையோர் என்று ஏன் காது கிறீர்கள்.சுய லாபத்திற்கு. இப்போர் நீங்கள் கூட்டாக தீர்மானம் போட்டு ஜெயிக்க வாய்த்த கட்சி தானென ஆட்சி நடத்துகிறது. அப்புறம் உங்களுக்கு என்ன கவலை.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)