பதிவு செய்த நாள்
21 செப்2021
20:46
நோக்கியா தொலைபேசிகளின் தாயகமான எச்எம்டி குளோபல், ரிலையன்ஸ் ரீடெயில் லிமிடெட், பிரபலமான நோக்கியா சி-சீரிஸ் ஸ்மார்ட் போன்களின் சமீபத்திய வரவான, 'நோக்கியா சி 01 பிளஸ்' போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ எக்ஸ்க்ளூசிவ் சிறப்புச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி ஆதரவு விலையைப் பெற முடியும். நோக்கியா சி 01 பிளஸ் இந்தியாவில் ப்ளூ மற்றும் பர்பிள் கலர் வகைகளில், 2/16 ஜிபி உடன், சிறந்த ஆப்லைன் சில்லறை கடைகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நோக்கியா.காம் தளம் ஆகியவற்றில் 5999 ரூபாய் என்ற விலையில் இது கிடைக்கிறது.
5.45 எச்டி+ திரை உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் யூ டியூப் வீடியோக்களைப் பார்க்கும் அனுபவத்தை அளிக்கும். பிளாஷ் கொண்ட 5 எம்பி எச்டிஆர் பின்புறம் மற்றும் 2 எம்பி முன் கேமராவைப் பயன்படுத்தி அற்புதமான புகைப்படங்களை எடுக்கலாம். மாற்றக் கூடிய 3000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்ட, நோக்கியா சி 01 பிளஸ் போனில் சார்ஜ் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ஆண்ட்ராய்டு 11 டிஎம் உடன் வரும் நோக்கியா சி 01 பிளஸை நீங்கள் நம்பலாம். இது உங்கள் டேட்டா பயன்பாட்டை 60 சதவீதம் குறைக்க உதவுகிறது, செயலிகள் 20 சதவீதம் அதிக வேகத்தில் செயல்படும். ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) விட 900 எம்பி கூடுதல் சேமிப்புத் திறனை வழங்குகிறது.
சன்மீத் சிங் கோச்சார், துணைத் தலைவர், எச்எம்டி குளோபல் பேசுகையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. குறைந்த பட்ஜெட், தொடக்க நிலை ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். இந்தியாவில் நோக்கியா சி 01 பிளஸை அறிமுகப்படுத்த இது ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த புதிய சாதனத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நல்ல தரமான அம்சங்கள் கிடைக்கும். அத்துடன் ஸ்மார்ட்போன்களை எளிதில் வாங்குவதை இது சாத்தியமாக்கும்” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|