பதிவு செய்த நாள்
16 அக்2021
19:25

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் பிராண்டு’ நிறுவனம், பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவின், ‘எம்.எம்., ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.இந்த 40 சதவீத பங்குகளை, என்ன விலையில் ரிலையன்ஸ் பிராண்டு வாங்குகிறது என்பது அறிவிக்கப்படவில்லை.
ரிலையன்ஸ் பிராண்டு நிறுவனம் இதுவரை அதனுடைய வடிவமைப்பாளர்களையே பயன்படுத்தி வந்த நிலையில், முதல்தடவையாக வெளியே முதலீட்டை மேற்கொண்டுள்ளது.இதன் வாயிலாக, 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எம்.எம்., ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி, இனி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டில் துவங்கப்பட்ட எம்.எம்., ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு மும்பை, புதுடில்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஸ்டோர்கள் உள்ளன. இந்நிறுவனத்தில், மல்ஹோத்ராவுடன் சேர்ந்து மொத்தம் 700 கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் 40 சதவீத பங்குகளை வாங்கிய போதிலும், மனிஷ் மல்ஹோத்ராவே எம்.எம்., ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|