பதிவு செய்த நாள்
09 ஜன2022
19:40

நிதி பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எதிர்பாராத வேலை இழப்பு அல்லது தொழில் நஷ்டம், பொருளாதார பாதிப்பை உண்டாக்கலாம். அல்லது வரவுக்கு மீறி செலவு செய்வது போன்றவற்றாலும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கலாம். இது போன்ற சூழல் சோதனையானது என்றாலும், உறுதியுடன் திட்டமிட்டு செயல்பட்டால் மீண்டு வந்துவிடலாம். ஆனால், ஒரு சிலர் தங்களது நிதி பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையில் சிக்கி தவிப்பதுண்டு. இது மேலும் பிரச்னைக்கு வழிவகுக்கலாம். இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
நிதி மறுப்பு:
நிதி விஷயங்கள் மன அழுத்தத்தை உண்டாக்கலாம். இதை எதிர்கொண்டு தீர்வுகளை நாடுவதற்கு பதிலாக, நிதி விஷயங்கள் பற்றியே யோசிக்காமலும், பேசாமலும் இருப்பது, ‘நிதி நிலை மறுப்பு’ என சொல்லப்படுகிறது. நிதி பிரச்னைகளை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய எதிர்மறை உணர்வை தவிர்ப்பது இதற்கான நோக்கமாகிறது.
நிதி வேஷம்:
நிதி நிலை மறுப்பு மனநிலை கொண்டவர்கள், தங்களது நிதி பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதை தவிர்ப்பர். மேலும் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதைதவிர்ப்பதற்காக, நல்ல நிலையில் இருப்பது போல காண்பித்துக் கொள்வர். சிலர், தற்பெருமை பேசுவதோடு, மற்றவர்களையும் குறை சொல்வதில் ஈடுபடலாம்.
தப்பித்தல் மனநிலை:
நிதி பிரச்னைகள் பற்றி பேசாமல் இருப்பதோடு, வங்கிக் கணக்கு புத்தகம், கிரெடிட் கார்டு அறிக்கை போன்றவற்றை திறந்து பார்க்காமல் இருப்பதையும் ஒரு உத்தியாக பின்பற்றுவர். நிதி பிரச்னைகளை நினைவூட்டக்கூடியவர்களையும் தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். இது ஒரு பொய்யான பாதுகாப்பை அளிக்கும்.
உதவி கோருதல்:
நிதி பிரச்னைகளை ஏற்க மறுக்கும் மனநிலை தற்காலிக ஆறுதலை அளித்தாலும், பிரச்னை பெரிதாகும் போது நிலைமை மோசமாகலாம். எனவே, முதலில் தங்களுக்கு பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு, அது குறித்து வெளிப்படையாகபேச முன்வருவது அவசியம். நம்பகமானவர்களின்உதவியை நாடலாம்.
தீர்வுக்கு வழி:
பிரச்னையை ஏற்றுக்கொண்ட பின், உண்மையான நிதி நிலையை கண்டறிய வேண்டும். அடுத்ததாக எல்லாவற்றையும் சரி செய்து விட முடியும் எனும் நம்பிக்கையோடு, பிரச்னையை சமாளிக்கும் வழிகளை நாட வேண்டும். கடனை அடைப்பது, வேலை தேடுவது போன்றவற்றை துவக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|