அபார வளர்ச்சி கண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி அபார வளர்ச்சி கண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி ...  பங்கு சார்ந்த பண்டுகளில் சாதனை முதலீடு பங்கு சார்ந்த பண்டுகளில் சாதனை முதலீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி கார்கள் விலை 4.3 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
22:07

புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’, அதன் கார்களின் விலையை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.மேலும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கார் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்கும் விதமாக, மாடல்களை பொறுத்து 0.1 சதவீதத்திலிருந்து, 4.3 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையடுத்து, டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை பொறுத்த வரை, மாருதி கார்களின் சராசரி விலை உயர்வு 1.7 சதவீதமாக உள்ளது.
மாருதி நிறுவனம், 3.15 லட்சம் ரூபாய் விலை கொண்ட ‘ஆல்டோ’ கார்களிலிருந்து, 12.56 லட்சம் ரூபாய் விலை கொண்ட ‘எஸ் கிராஸ்’ கார்கள் வரை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை விலையை அதிகரித்துள்ளது. ஜனவரியில் 1.4 சதவீதம், ஏப்ரலில் 1.6 சதவீதம், செப்டம்பரில் 1.9 சதவீதம் என, மொத்தம் 4.9 சதவீதம் விலையை அதிகரித்துள்ளது.
கார் தயாரிப்புக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான அலுமினியம், உருக்கு, செம்பு, பிளாஸ்டிக் மற்றும் விலைஉயர்ந்த உலோகங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்டதால், கடந்த ஆண்டில் பல முறை விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று என, இந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது புத்தாண்டில் மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)