டிஜிட்டல் ரூபாய் தொடர்பான முக்கிய அம்சங்கள் டிஜிட்டல் ரூபாய் தொடர்பான முக்கிய அம்சங்கள் ...  ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று துவங்குகிறது ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று துவங்குகிறது ...
ஆயிரம் சந்தேகங்கள்: ஒரே வங்கியில் இரண்டு சேமிப்பு கணக்கு சாத்தியமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2022
22:16

நான் அரசு ஊழியர். என் மனைவி பெயரில் வங்கியில் ஆர்.டி., கணக்கு துவக்கி, சேமிக்க விருப்பம். முதிர்வு தொகை பெறும்போது, அவர் வருமான வரி செலுத்த வேண்டுமா?
ஞானசங்கர், ராமநாதபுரம்.
உங்கள் மனைவி வேலைக்குச் செல்கிறாரா, செல்லவில்லையா என்பதை நீங்கள் குறிப்பிட வில்லை. அவர் வேலைக்குச் செல்லாதவராக இருந்து, அவர் பெயரில் ஆர்.டி., போட்டு வந்தால், அதன்மூலம் வருமான வரியைச் சேமிக்கலாம் என்று நீங்கள் கருதினால், அது சாத்தியமில்லை. ஏனெனில், அவரது வட்டி வருவாயும் உங்களுடைய வருவாயோடு ‘கிளப்’ செய்யப்பட்டு, மொத்த தொகைக்கும் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.
அவர் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அந்தக் குறிப்பிட்ட நிதியாண்டில், அவர் ஈட்டும் மொத்த வருவாயைப் பொறுத்து, வருமான வரி அமையும். ஆர்.டி., வைப்பு நிதி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் வட்டி, 40 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்குமானால், டி.டி.எஸ்., செலுத்த வேண்டாம். படிவம் ‘15ஜி’ கொடுத்தால் போதும்.
ஆர்.டி., உள்ளிட்ட வைப்பு நிதி திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டியை, வருமான வரியில் காண்பித்து, வரி கட்ட வேண்டியது அவசியம்.
என் மகன் தன்னுடைய வருமானத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய காலி வீட்டு மனையை, சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு தான செட்டில்மென்ட் செய்துள்ளார். மூத்த குடிமகனான நான், அந்தச் சொத்தை இப்போது விற்க விரும்புகிறேன். இதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, நீண்டகால முதலீட்டு ஆதாய வரியை, நானோ அல்லது என் மகனோ கட்ட வேண்டி இருக்குமா? அப்படி கட்ட வேண்டும் என்றால் யார் கட்ட வேண்டும்?
எம்.எஸ்.சுலைமான், சென்னை.
ஒரு சொத்து தானமாகவோ, பரிசாகவோ, வாரிசுரிமை அடிப்படையிலோ உங்களுக்கு வந்தால், அதற்கு நீங்கள் தான் உரிமையாளர் ஆகிறீர்கள். அதனால், இச்சொத்தை விற்பனை செய்யும்போது வரும் தொகைக்கு, நீண்ட கால அல்லது குறுகிய கால ஆதாய வரியை நீங்கள் தான் செலுத்த வேண்டும். உங்கள் விஷயத்தில், நீங்கள் நீண்டகால ஆதாய வரி செலுத்த வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மகன் அந்த காலி வீட்டு மனையை என்ன தொகைக்கு வாங்கினாரோ, அதையே ‘வாங்கிய விலை’யாக எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப ‘இண்டக்சேஷன்’ கணக்கு போட வேண்டும். நல்ல ஆடிட்டர் ஒருவரை கலந்தாலோசித்து, எவ்வளவு தொகை கட்ட வேண்டியிருக்கும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
நான் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கி கிளையில், என் பெயரிலேயே மற்றுமொரு சேமிப்பு கணக்கு துவக்க முடியுமா? அவ்வாறு முடியாது என்றால், அதே வங்கியின் வேறு கிளையில் துவக்கலாமா?
சுப்புலட்சுமி, மின்னஞ்சல்.
ஒரு வங்கிக் கிளையில், ஒரே பெயரில், இரண்டு சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க முடியாது. வேறு கிளையிலும் துவக்க முடியாது. ஒரு வங்கியில், ஒரு நபருக்கு, ஒரு சேமிப்புக் கணக்கு தான் அனுமதிக்கப்படும் என்று தெளிவாகத் தெரிவிக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறை.
ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளை ஒரு நபர் வைத்திருந்தால், ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை அடுத்த 30 நாட்களுக்குள் மூடிவிட வேண்டும் என்று, 2012ல் வெளியான ஆர்.பி.ஐ., சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது. இதே வங்கிக் கிளையில், வைப்பு நிதிக் கணக்கு, ஆர்.டி., கணக்கு போன்றவற்றை இதர வகையான கணக்குகளை வைத்துக் கொள்ள தடையில்லை.
எல்.ஐ.சி.,யில் தற்போது பாலிசிதாரர்களின் பான்கார்டு மற்றும் டிமேட் அக்கவுன்டை இணைக்க சொல்கிறார்களே, அது ஏன்?
வெங்கட், கோவை.
என்ன சார், நாடே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒன்றுமே தெரியாத மாதிரி கேட்கிறீர்கள். இன்னும் சிறிது நாட்களில் ஒரு பெரிய திருவிழா நடக்க இருக்கிறது. எல்.ஐ.சி., பங்குச் சந்தைக்கு வரப் போகிறது. அதன் பாலிசிதாரர்களுக்கு, குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகளை ஒதுக்கித் தருவதற்கு எல்.ஐ.சி. திட்டமிட்டு உள்ளது.
நீங்கள் பயன் அடைய வேண்டும் என்பதற்குத் தான், எல்.ஐ.சி., வலைதளத்தில் பாலிசி எண்ணோடு, பான் எண்ணை இணைக்கச் சொல்கிறார்கள். டிமேட் கணக்கும் வைத்திருக்கச் சொல்கிறார்கள். உலக அளவில் எல்.ஐ.சி., தான் மூன்றாவது வலிமையான பிராண்டு என்று ஓர் ஆய்வு அறிக்கை சொல்கிறது. அதன் பங்குகளை வாங்கிப் போட்டு வையுங்கள். உங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் உதவும்.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளேன். நான் படிவம் 15 எச் கொடுத்து உள்ளேன். ஆனாலும், வரிப்பிடித்தம் செய்கிறார்கள். ஆண்டுதோறும் படிவம் ‘15 எச்’ கொடுக்க வேண்டுமா? எனக்கு வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை; திரும்ப பெற வழி என்ன?
த.கதிரேசன், திருநெல்வேலி; கிருஷ்ணகுமார், மின்னஞ்சல்.
பிடிப்பது ஐ.டி., அல்ல; டி.டி.எஸ்., அதுவும், ‘டிவிடெண்ட்’ தொகை உங்களுக்கு வழங்கப்படும் போது தான் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படும். உங்களுடைய மொத்த வருவாய், வருமான வரி விலக்கு அளவுக்குள் இருந்தால், டி.டி.எஸ்., பிடித்தத்தை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் படிவம் 15 எச் கொடுக்க வேண்டும். அப்படியே பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால், அது உங்களுடைய பாரம் 26ஏ.எஸ்.,சில் பிரதிபலிக்கும்.
வருமான வரிக்கான ‘ரிட்டர்ன்’ தாக்கல் செய்யும்போது, நீங்கள் வருமான வரி விலக்கு அளவுக்குள் இருந்தால், கூடுதல் தொகை இருப்பின், அது உங்களுக்கு ‘ரீபண்டு’ செய்யப்படும்.
நகரப் பகுதியில் இருக்கும் எங்கள் நிலத்தை, தொழிற்சாலைத் தேவைக்காக என்று சொல்லி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துக் கொண்டது. அதற்கு அவர்கள் வழங்கிய இழப்பீடு தொகைக்கு, மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டுமா?
எஸ்.சந்திரசேகரன், சென்னை.
உங்கள் நிலம், நகரத்தில் இருக்கும் விவசாய நிலமாக இருந்து, அதை மத்திய அரசோ, இந்திய ரிசர்வ் வங்கியோ, கட்டாயமாக கையகப்படுத்தி இருக்குமானால், வருமான வரிச் சட்டம் பிரிவு 10(37)படி, இழப்பீட்டுத் தொகைக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. மேலும், அந்த நிலம், கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகள் வரை விவசாயத்துக்கு பயன்பட்டிருக்க வேண்டும் என்பது கூடுதல் விதிமுறை. இல்லையென்றால், நீங்கள் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.
ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)