மேக்மைட்ரிப் குழுமம் அறிமுகப்படுத்தும் “ரெட் ரயில்” சேவைமேக்மைட்ரிப் குழுமம் அறிமுகப்படுத்தும் “ரெட் ரயில்” சேவை ... தங்கம் விலை மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது ...
புதிய ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் புரோ டிவி அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
10:51

உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி வரிசையில் சமீபத்திய சேர்ப்பாக புத்தம் புதிய ஒன்பிளஸ் டிவி ஒய் சீரீஸ் 43ஒய் 1எஸ் புரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தம் புதிய ஒன்பிளஸ் டிவி ஒய் சீரீஸ் ஒய்1 எஸ் புரோ அமேசான், ஒன்ப்ளஸ், குரோமா, ஜியோ டிஜிட்டல், ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆன்லைன் மற்றும் பிற ஆப்லைன் சேனல்களிலும் கிடைக்கும். இந்த டிவியானது மேம்படுத்தப்பட்ட 43 அங்குலம் 4கே யுஎச்டி டிஸ்ப்ளே மற்றும் பயனர்களுக்கு சிறந்த இணைக்கப்பட்ட சூழல் அனுபவத்தை வழங்குகிறது

புதிய அறிமுககம் குறித்து ஒன்பிளஸ் இந்தியாவின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியப் பிராந்தியத்தின் தலைவருமான நவ்நித் நக்ரா கூறுகையில், “2019 ஆம் ஆண்டில் எங்கள் ஒன்பிளஸ் டிவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எங்கள் ஸ்மார்ட் டிவி போர்ட்போலியோ மூலம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டோம். ஒன்பிளஸ் 2020 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய ஸ்மார்ட் டிவி பிரிவில் நம்பமுடியாத அளவிற்கு 350% வளர்ச்சியடைந்தது. கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையின்படி ஒன்பிளஸ் டிவி ஒய் சீரீஸ் ஒரு பெரிய கொள்ளளவு இயக்கியாக செயல்படுகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் டிவிகளின் குறிப்பிடத்தக்க வரவேற்பின் காரணமாக, எங்களது ஒன்பிளஸ் டிவி ஒய் சீரீஸ் போர்ட்ஃபோலியோவில் - தி ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1 எஸ் புரோவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிவி ஒன்பிளஸ் டிவி விலை 29,999 ரூபாய் ஆகும், என்றார்.

இந்த புத்தம் புதிய டிவியில் விவிட் 4கே யுஎச்டி டிஸ்ப்ளே, எம்இஎம்சி உடன் காமா எஞ்சின், சிறந்த பார்வை அனுபவத்திற்கான எச்எல்ஜி வடிவ ஆதரவு, வேகமான மற்றும் சுவாரசியமான கேமிங் அனுபவத்தை அனுபவிக்க ஆட்டோ லோ லேட்டன்சி மோட், கூகுள் அசிஸ்டன்ட், ஸ்மார்ட் மேனேஜர் அம்சம், ஒன்பிளஸ் பட்ஸ் இணைப்பு, ஒன்பிளஸ் வாட்ச் இணைப்பு, ஒன்பிளஸ் கனெக்ட் 2.0, தனித்துவமான கிட்ஸ் மோட் அம்சம், குறிப்பிட்ட வாட்ச் டைம் லிமிடேஷன் அம்சம், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)