பதிவு செய்த நாள்
14 மே2022
15:32

மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் இந்தியாவின் மிகவும் எடை குறைவு என்பதுடன் 6.79 செமீ தடிமனுடன் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனும் இதுதான். ஸ்மூத் மல்டி-டாஸ்கிங்க், ப்ளாக்ஷிப் கிரேட் செயல்பாட்டுக்கான ஸ்நாப் டிராகன் 778ஜி + 5ஜி புராசஸர் என அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் மோடோரோலா எட்ஜ் 30 ஆகும்.
மோடோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 2022 மே 19 மதியம் 12 மணி முதல் மீடியோர் க்ரே மற்றும் ஔரோரா க்ரீன் ஆகிய இரு வண்ணங்களில் பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிடல் மற்றும் முன்னணி சில்லரை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். 6ஜிபி ராம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 27,999க்கும் சலுகை விலையாக ரூ.25,999க்கு கிடைக்கும். 8ஜிபி ராம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 29,999க்கும் சலுகை விலையாக ரூ.27,999க்கும் கிடைக்கும். ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்ட் மற்றும் இஎம்ஐ பரிமாற்றங்கள் மீது ரூ 2000/- உடனடி தள்ளுபடி கிடைக்கும். ரூ 4334/- தொடங்கி நுகர்வோர் 6 மாதங்கள் வரை ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்ட்டுகள் மீது நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகளும் உண்டு.
மேலும் இதிலுள்ள 144 ஹெச்இசட், 10 பிட்பிஓலெட் டிஸ்ப்ளே பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களைக் காட்சிப்படுத்தும் திறன் கொண்டதாகும். ஹெச்டிஆர்10+, டிசி-டிம்மிங்க் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் வசதிகளும் உண்டு. மோடோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் பொழுதுபோக்கு அனுபவம் டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பிக்கர்கள், ஆழமான மற்றும் துல்லியமான இசைக்கு ஸ்நாப்டிராகன் சவுண்ட் அம்சங்களும் உள்ளன. மோடோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் மோடோரோலா சிக்னேசர் நியர்-ஸ்டாக் ஆண்ட்ராயிட் 12 சிறந்த அனுபவம், 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராயிட் 13 மற்றும் 14+ வரை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நிகழ்நிலைப்படுத்தும் வசதிகள் இருக்கின்றன.
இதிலுள்ள ‘ரெடி பார்’ தொழில்நுட்பம் கைபேசி விளையாட்டுகள், வீடியோ அழைப்புகள், பெரிய திரையில் கைபேசி செயலிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும். தடையற்ற வயர்லெஸ் இணைப்பு மூலம் பயனீட்டாளர்கள் எந்த வகையான இடையூறுகளும் இல்லாமல் தொலைகாட்சிப் பெட்டியுடன் இணைத்து மகிழலாம்.
மோடோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனிலுள்ள கைபேசிகளுக்கான திங்க் ஷீல்ட் பாதுகாப்பு மிகச் சிறந்த பிசினஸ்-கிரேட் பாதுகாப்பை வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொருத்தவரை மோடோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் இந்தியாவின் முதல் 50 எம்பி ஹை ரெசொல்யூஷன் அல்ட்ராவைட் + மேக்ரோ கேமரா, ஓஐஎஸ்ஸுடன் 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா ஆகிய உண்மையான ப்ளாக்ஷிப் கிரேட் செட்-அப் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இணைப்பைப் பொருத்தவரை, மிகச் சிறந்த 13 5ஜி பேண்ட்டுக்கான ஆதரவு, வைபை 6இ, 3 கேரியர் அக்ரெகேஷன், தரவுகளை வேகமாக அனுப்பவும், தடையற்ற இணைப்புக்கும் 4X4 எம்ஐஎம்ஓ உள்ளிட்ட நவீனங்கள் இருக்கின்றன என மோடோ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|