மேற்கோள்மேற்கோள் ... டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ...
சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
19:59

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். இன்னும் சிலர், முதலில் ஒரு வேலையில் ஈடுபட்டு, பின்னர் குறிப்பிட்ட கட்டத்தில் அதிலிருந்து விலகி சொந்தமாக தொழில் துவங்க தீர்மானிக்கலாம்.


பணி அனுபவமும் தொழில்முனைவில் கைகொடுக்கலாம் என்றாலும், நல்ல வேலையையும், நிரந்தர வருமானத்தையும் விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்வது சவாலானது. இந்த சவாலை திறம்பட எதிர்கொள்ள நிதி திட்டமிடல் கைகொடுக்கும். சொந்தமாக தொழில் துவங்குபவர்கள் நிதி திட்டமிடலை சிறப்பாக மேற்கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
அடிப்படை வருமானம்: பணியில் இருந்து விலகி சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறவர்கள், முதலில் தங்கள் குடும்பத்தை இது தொடர்பான இடர்களில் இருந்து பாதுகாக்க வழி செய்ய வேண்டும். குடும்பத்தின் அடிப்படை செலவுக்கு தேவையான தொகை மாதந்தோறும் கிடைக்கும் வகையில் முதலீடு செய்திருக்க வேண்டும்.


பணவீக்கம்: குடும்ப செலவுகளுக்கான அடிப்படையான தொகையை உறுதி செய்துவிட்டால், மாத செலவுகளை சமாளிக்கும் கவலை இல்லாமல் தொழிலில் கவனம் செலுத்தலாம். ஆனால், இதற்கான முதலீடு பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதிக இடர் உள்ள முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

மூலதனம்: தொழிலுக்கு தேவையான அடிப்படை மூலதனத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். இந்த தொகையை கடன் வாங்குவது இடர் மிக்கது. அதே நேரத்தில், கைவசம் உள்ள முதலீடுகளையும் இது பாதிக்கக் கூடாது. தொழிலுக்கான மூலதன தொகையை முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்திருப்பது நல்லது.

நிதி உதவி: ஆரம்ப மூலதனம் தவிர, தேவைப்படும் போது மூலதனம் தொடர்பாக நிதி உதவி செய்யக்கூடிய நபர்களை கண்டறிந்து வைத்திருப்பது அவசியம். இவர்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினராக இருக்கலாம். பாதுகாப்பான கடன் வசதிக்கான வழிகளையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

எதிர்பாராத செலவுகள்: குடும்பத்தில் அல்லது தொழிலில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய செலவுகளையும் சமாளிக்க வேண்டும். திடீரென பணம் தேவைப்படும் போது, முதலீட்டின் ஒரு பகுதியை விலக்கிக் கொள்ள நேர்வது பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் திட்டமிடல் அமைந்திருக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)