பதிவு செய்த நாள்
14 மார்2011
10:41
மதுரை : ரோமிங் சேவையால் பெரிதும் பாதிக்கப்படும் மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தியாக, சிறப்பு ரோமிங் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் (தமிழ்நாடு மற்றும் கேரளா பிரிவு) உயர் அதிகாரி ராகேஷ் சிங் வெளியிட்டுள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தாங்கள் தற்போது அறிமுகம் செய்துள்ள ரோமிங் பேக், ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ என 2 சேவைகளுக்கும் பொருந்தும். ரூ. 82 ரீசார்ஜ் செய்வதன் மூலம், எந்த நெட்வொர்க்கிற்கும் வினாடிக்கு 1 பைசா என்ற அளவில் 1 ஆண்டிற்கு பேசலாம். இதன்மூலம் தங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள், இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எப்போதும் இணைந்திருக்கலாம் என்றும், இதன்மூலம், பல புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்வொர்க்கை விரும்பி வருவார்கள் மேலும் தங்கள் நெட்வோர்க் மீதான மக்களின் நன்மதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|