வரும்  நிதியாண்டின் முதல் 6 மாதத்தில்ரூ.2.50 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்வரும் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில்ரூ.2.50 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு ... ... பனியன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற 'ஸ்டிரைக்':தினமும் ரூ.22 கோடி உற்பத்தி இழப்பு பனியன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற 'ஸ்டிரைக்':தினமும் ரூ.22 கோடி உற்பத்தி ... ...
பங்குச் சந்தையில் காளை தலை காட்டுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2011
04:06

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்று, கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இவ்வாரம் பங்கு வர்த்தகமும் நன்கு இருந்ததால், முதலீட்டாளர்களுக்கும் இது, மகிழ்ச்சிகரமான வாரமாக உள்ளது.வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 465 புள்ளிகள் அதிகரித்து,18,815 புள்ளிகளிலும்,தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,132 புள்ளிகள் உயர்ந்து,5,654 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இந்த வாரம் மட்டும்,மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 937 புள்ளிகளும்,தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 281 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. வெள்ளிக்கிழமை வர்த்தக உயர்விற்கு என்ன காரணம்: வெள்ளிக்கிழமையன்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் விலை அதிக அளவில் உயர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அமெரிக்காவின் அக்செஞ்சர், ஆரக்கிள் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இருந்ததுடன், இவ்விரு நிறுவனங்களின் எதிர்கால கணிப்புகளும் சிறப்பாக இருந்தது. இரண்டாவதாக, இந்தியாவில்சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்கள் திட்டத்தை மேலும், ஓராண்டிற்கு நீட்டிக்க வேண்டும் என,'நாஸ்காம்' அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இதனால்,சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால், இத்துறை நிறுவனப் பங்குகளின் விலை, வெள்ளிக்கிழமையன்று, 4 சதவீதம் வரை உயர்ந்தது. மேலும், முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது. இந்த வாரம் சந்தை ஏன் இவ்வளவுகூடியது? இயற்கை சீற்றத்திற்கு பிறகு, ஜப்பான் மீண்டும் இயல்பு நிலைக்கு வரத்தொடங்கியுள்ளது. வாரன் பப்பட், இந்தியாவுக்கு வந்ததும், அவர் இந்தியாவின் மேல் வைத்திருக்கும் அபார நம்பிக்கையும், பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது. மேலும், பங்கு சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கடந்த ஒரு சில வாரங்களாக, நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்ததால், பல நிறுவனப் பங்குகளின் விலை குறைவாக இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி, வாங்குவோர்கள் அதிகரித்ததாலும், பங்கு வியாபாரம் மேலே öŒன்றது. உலகளவில், இந்திய சந்தைகளில் தான் வர்த்தகம் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. புதிய வெளியீடுகள்: லவ்வபிள் லிங்கரி நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமையன்று பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. 205 ரூபா#க்கு வெளியிடப்பட்ட இதன் பங்கு ஒன்றின் விலை, அன்றைய தினம், 27 சதவீதம் அதிகரித்தது. இரண்டு லட்சம் ரூபாய் வரை போட்டவர்களுக்கு 50 பங்குகளுக்கு குறைவாக கிடைத்தது. ஆதலால், இவர்களுக்கு அதிகளவில் லாபம் கிடைத்திருக்காது.அதேசமயம், வங்கி டிபாசிட்டில் இரண்டு லட்சம் ரூபாய் போட்டவர்களை காட்டிலும், இதன் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு, லாபம் கிடைத்திருக்கும். ஆனால், வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை, சற்று குறைந்து காணப்பட்டது.பங்கு வெளியீட்டை மேற்கொண்ட ஷில்பி கேபிள்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 3.48 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இதில், சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து,5.74 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன.பி.டி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், அதன் பங்கு ஒன்றின் விலையை, 28 ரூபாயாக அளவில் நிர்ணயித்திருந்தது. இதன் பங்குகள் வேண்டி குறைந்த அளவிற்கே விண்ணப்பங்கள் வந்ததால், இதன் பங்கு ஒன்றின் விலை, 26 அல்லது 27 ரூபா# என்ற அளவில் இருக்கும். பங்குகள் வேண்டி, இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு, 7,000 பங்குகள் ஒதுக்கீடு கிடைக்கும். வங்கி துறை பங்குகள்: புதிய வங்கிகள் தொடங்குவதற்கான கட்டுப்பாடு மற்றும் நெறிமுறைகள் குறித்த அறிக்கை, வரும் வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், தனியார் துறை வங்கி பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.விளைந்து கெடுக்கும் வெங்காயம்: தற்போது அதிகப்படியான விளைச்சலால், என்ன öŒ#வது என்று தெரியாமல் வெங்காயம், தனக்கு தானே கண்ணீர் வடிக்கிறது. மத்திய அரசு, அண்மையில், ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை, டன்னுக்கு 275 டாலராக நிர்ணயித்தது.இது, உலகளவில் தற்போது நிலவி வரும் விலையை விட அதிகம். சர்வதேச விலையை விட, ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை, மிகவும் அதிகமாக இருந்ததால், வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு, இவ்வாரத்தில்,வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, மீண்டும் 225 டாலராக குறைத்துள்ளது. இதனால், இதன் ஏற்றுமதி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரம் எப்படி இருக்கும்? பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து முதலீடு செய்பவர்களுக்கு, சந்தை எப்போதும் சரிவுகளைத் தந்ததில்லை என்ற பாடம், மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இடையிடையே வந்து செல்பவர்களுக்கு தான், சந்தை எப்போதும் ஒரு புதிராகவே இருக்கும். பங்கு சந்தையில் எல்லாரும் வாங்கும் போது, விற்க முயலுங்கள்; எல்லாரும் விற்கும் போது வாங்க முயலுங்கள். இதனை நடைமுறைப்படுத்துவது கடினம் தான். ஆனால், முயன்று பாருங்கள்; லாபம் ஈட்டலாம். அன்னிய நிதி நிறுவனங்கள், இவ்வாரத்தின் கடைசி மூன்று வர்த்தக தினங்களில் 1,014 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், முதலீடு அதிகரிக்கும் நிலையில், வரும் வாரம் சந்தையில் தென்றல் வீச வாய்ப்புள்ளது. - சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)