ஓய்வூதியம் மற்றும் குழந்‌தைகளுக்கான பாலிசிகள் : பார்தி ஆக்சா அறிமுகம்ஓய்வூதியம் மற்றும் குழந்‌தைகளுக்கான பாலிசிகள் : பார்தி ஆக்சா அறிமுகம் ... ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில்அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் ஹீரோ இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில்அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் ...
இந்தியாவின் 'வெற்றியை!' கொண்டாட கார்ப்பரேட் நிறுவனங்கள் ரெடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2011
16:44

பெங்களூரு : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், உலககோப்பை கிரிக்கெட் ஜூரம் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஆசிய நாடுகளையே வாட்டி வருகிறது என்று சொல்வது மிகையல்ல. பத்தாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பதவியிலிருந்து திங்கட்கிழமை விலகிய ரிக்கி பாண்டிங்கும், இந்திய அணி அரையிறுதிப் ‌போட்டியில் பாகிஸ்தானை வென்று, பைனலில் கோப்பையை கைப்பற்றும் என்று கூறியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும் தற்போது தயாராகி வருகி்ன்றன. அதற்குச் சான்றாக, பார்தி ஆக்சா நிறுவனம், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக, நாளைய தினத்தில், தங்களது வழக்கமான பணிநேரத்தை மாற்றியமைத்து, நாளைய தினம் மட்டும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிநேரம் வரை மட்டும் அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல, ஷிப்‌ட் முறையில் செயல்பட்டு வரும் முன்னணி இ-லேர்னிங் நிறுவனமான டாடா இண்ட்ராக்டிவ் சர்வீசஸ் நிறுவனம், நாளைய தினத்தில் மட்டும், எந்த ஷிப்டில் பணிபுரிந்து வருவோரும் காலை 08.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையிலான ஷிப்டில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. அதிதி் ‌டெக்னாலஜிஸ் நிறுவனம், இதற்கு மேல் ஒருபடி சென்று, ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வரலாம் என்றும், போட்டி துவங்கிய உடன் அவர்கள் கிளம்பி, கிரிக்கெட் ஜோதியில் ஐக்கியமாகலாம் என்று தெரிவி்த்துள்ளது. இந்த நிறுவனங்கள், பணிநேரத்தை மட்டும் மாற்றி அமைத்துள்ளன என்பதை நினைத்துக் கொண்டிருக்கும் போது, மேக் மை டிரிப் மற்றும் கோகோபெரி நிறுவனங்கள், நாளை விடுமுறை நாளாகவே அறிவித்து தங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம், கிரிக்கெட் வெற்றியை அலுவலகத்தில் கொண்டாடும் வகையில், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நாளைய தினத்தில் டிரஸ் கோட் கிடையாது என்றும், அலுவலகத்திலேயே, ‌பெரிய திரையில் சிற்றுண்டிகளுடன் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாபியண்ட் நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்கள் இந்திய அணி சீருடையில் பணிக்கு வரலாம் என்றும், ஜென்பேக்ட் நிறுவனம், அலுவலகத்தில் பெரிய திரையில் போட்டியை காண ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கொண்டாட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், நாட்டின் எல்லையையும் கடந்து லாகூரில், பாகிஸ்தான் பேஷன் டிசைன் கவுன்சில் ( பிஎப்டிசி) சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று (29-03-11) துவங்கவிருந்த 4 நாட்கள் பேஷன் திருவிழா, கிரிக்கெட் போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, பெரும்பாலான முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவின் வெற்றியை கொண்டாட தயாராகி உள்ளன. கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியும் ‌கோப்பையை வென்று கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செயவதோடு மட்டுமல்லாமல், அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் எண்ணத்தை ஈடேற உள்ளதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து, கபில்தேவ் கூறியதாவது, இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)