நிலக்கடலை மூட்டைக்கு ரூ.300 உயர்வுநிலக்கடலை மூட்டைக்கு ரூ.300 உயர்வு ... பெட்ரோநெட் நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் பெட்ரோநெட் நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி மையம் ...
சென்ற 2010-11ம் நிதியாண்டில் வாகன விற்பனை 26 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
00:17

புதுடில்லி: சென்ற நிதியாண்டில், வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், மொத்த வாகனங்களின் விற்பனை, 1 கோடியே 55 லட்சத்து 13 ஆயிரத்து 156 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 26.17 சதவீதம் (1 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரத்து 697 வாகனங்கள்) அதிகம்.நாட்டின் பொருளாதாரம் சிறப்பான வகையில் இருப்பது, நிறுவனங்கள் புதிய மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்தது, சிறிய அளவிலான விலையேற்றம் போன்றவைகளால் தான், மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார்.எனினும், மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற இடர்பாடுகளால், நடப்பு நிதியாண்டில், வாகனங்கள் விற்பனை சென்ற ஆண்டை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மோட்டார் வாகனங்கள் விற்பனை, நல்ல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது என்றாலும், உற்பத்தி செலவுகள் உயர்ந்து வருவதால், பல நிறுவனங்கள், வாகனங்களின் விலையை மேலும் உயர்த்தும் என்ற கருத்தும், சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால், நடப்பாண்டில் வாகனங்கள் விற்பனை வளர்ச்சி குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் கார் விற்பனை வளர்ச்சி 16 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை 26 சதவீதத்திலிருந்து, 12 - 14 சதவீதமாக குறையவும், டிரக் மற்றும் பஸ்கள் விற்பனை 27 சதவீதத்திலிருந்து, 14 - 16 சதவீதமாக குறையவும் வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், பயணிகள் வாகனங்கள் விற்பனை, முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 29.16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதே நிதியாண்டுகளில், பயணிகள் கார்கள் விற்பனை 29.73 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 லட்சத்து 28 ஆயிரத்து 337 என்ற எண்ணிக்கையிலிருந்து, 19 லட்சத்து 82 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.இரு சக்கர வாகனங்கள் விற்பனை, சென்ற நிதியாண்டில், 25.82 சதவீதம் வளர்ச்சி கண்டு, 93 லட்சத்து 70 ஆயிரத்து 951 வாகனங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரத்து 305 வாகனங்களாக அதிகரித்துள்ளது.இதே ஆண்டுகளில், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 22.86 சதவீதம் வளர்ச்சியடைந்து, 73 லட்சத்து 41 ஆயிரத்து 112 என்ற எண்ணிக்கையிலிருந்து, 90 லட்சத்து 19 ஆயிரத்து 90 வாகனங்களாக உயர்ந்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனையும், 41.79 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14 லட்சத்து 62 ஆயிரத்து 534 என்ற எண்ணிக்கையிலிருந்து, 20 லட்சத்து 73 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.வர்த்தக வாகனங்கள் விற்பனை, சென்ற நிதியாண்டில், 26.97 சதவீதம் அதிகரித்து, 5 லட்சத்து 32 ஆயிரத்து 721 என்ற எண்ணிக்கையிலிருந்து, 6 லட்சத்து 76 ஆயிரத்து 408 வாகனங்களாக உயர்ந்துள்ளது. சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதி 29.64 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், பயணிகள் வாகனங்கள் விற்பனை 1.64 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வர்த்தக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி முறையே, 69.51 சதவீதம், 55.86 சதவீதம் மற்றும் 35.04 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் பயணிகள் கார்கள் விற்பனை, சென்ற மார்ச் மாதம், 24.73 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 1 லட்சத்து 56 ஆயிரத்து 145 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 லட்சத்து 94 ஆயிரத்து 199 வாகனங்களாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)