பதிவு செய்த நாள்
16 ஏப்2011
10:53
மஹிந்திரா நிறுவனம், மல்டி யுடிலிட்டி வைக்கிள் பிரிவில், ஸ்கார்ப்பியோ மற்றும் பொலிரோ கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் 2011ம் ஆண்டுக்கான பொலிரோ ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.7.5 லட்சம்( எக்ஸ்ஷோரூம், டில்லி). ஏற்கனவே விற்பனையில் உள்ள பொலிரோ காரை விட இது ரூ.80 ஆயிரம் அதிகம். இந்த கார், ஆயிரம் எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் உட்புறமும், வெளிப்புறமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கார் திருட்டை தடுக்கும் வகையில், பொலிரோ டெலி அஸிஸ்ட் சிஸ்டம்( பி.டி.ஏ.எஸ்.,) என்ற தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. காரை யாராவது திருட முயன்றால், காரில் இருந்து உங்களின் மொபைல் ஃபோனுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் வந்து விடும். இதே போல, எஸ்.எம்.எஸ்., மூலம் காரை ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும். இந்த காரில்2523 சிசி திறன் கொண்ட, டிஐ டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|