ஏப்ரல் மாத சுழலிலிருந்து தப்பிய நானோஏப்ரல் மாத சுழலிலிருந்து தப்பிய நானோ ... இ.பி.எப். வட்டி 9.5 சதவீதமாக தொடரும் இ.பி.எப். வட்டி 9.5 சதவீதமாக தொடரும் ...
வங்கிச் செய்திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2011
00:01

தேனா பேங்க் 22சதவீத டிவிடெண்டு தேனா வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 157 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 14.59 சதவீதம் (137 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், வங்கியின் நிகர வட்டி வருவாய் 326 கோடி ரூபாயிலிருந்து, 471 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முழு நிதியாண்டில், 611.60 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 19.64 சதவீதம் (511.20 கோடி ரூபாய்) அதிகம். தேனா வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றிற்கு 2.20 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. *** எக்சிம் பேங்க் நிகர லாபம் ரூ.584 கோடி எக்சிம் பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2010-11ம் நிதியாண்டில், 584 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 14 சதவீதம் ( 513 கோடி ரூபாய்) அதிகம். இதே நிதியாண்டுகளில் வங்கி வழங்கிய கடன்கள், 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46 ஆயிரத்து 41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், ஒப்புதல் வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு, 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 47 ஆயிரத்து 798 கோடி ரூபாயாகு நிதி உதவி அளித்துள்ளது. *** பேங்க் ஆப் பரோடாரூ.16.50 டிவிடெண்டு பேங்க் ஆப் பரோடா, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றிற்கு 16.50 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. இவ்வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முழு நிதியாண்டில், 4,241.60 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட, 38.60 சதவீதம் (3,058.30 கோடி ரூபாய்) அதிகம். இதே ஆண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய் 19 ஆயிரத்து 423 கோடி ரூபாயிலிருந்து, 24 ஆயிரத்து 695 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பரோடா வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நான்காவது காலாண்டில் 1,294.35 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலண்டை விட, 42.80 சதவீதம் (906.28 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், வங்கியின் மொத்த வருவாய் 40 சதவீதம் வளர்ச்சியடைந்து, 5,120.73 கோடி ரூபாயிலிருந்து 7,168.65 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாபம் 25.80 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1,945.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. *** விஜயா பேங்க்நிகர லாபம் ரூ.524 கோடி விஜயா பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 523.82 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 3.26 சதவீதம் (507.29 கோடி ரூபாய்) அதிகம். சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், இவ்வங்கி, 54.23 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 58.50 சதவீதம் (130.92 கோடி ரூபாய்) குறைவு. இதே காலாண்டுகளில், வங்கியின் செயல்பாட்டு லாபம் 65 சதவீதம் சரிவடைந்து, 314.37 கோடி ரூபாயிலிருந்து 109.96 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. *** ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்லாபம் ரூ.5,151 கோடி தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டில், 5,151 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 4, 025 கோடியாக இருந்தது.இதே நிதியாண்டுகளில் வங்கியின் நிகர வட்டி வருவாய், 8,114 கோடி ரூபாயிலிருந்து, 9,017 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி அல்லாத வருவாய் 7,478 கோடி ரூபாயிலிருந்து, 6,648 கோடியாக குறைந்துள்ளது. இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு 14 ரூபாயை டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)