பதிவு செய்த நாள்
02 மே2011
12:03
மும்பை : இன்ப்ராஸ்ட்ரெக்சர் டெவலப்மெண்ட் சேவைகள் வழங்கும் முன்னணி நிறுவனமான இன்பராஸ்ட்ரெக்சர் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கம்பெனி நிறுவனம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகரலாபம் 24.4 சதவீதம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐடிஎப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், தங்கள் நிறுவனத்தின் நிகரலாபம் 24.4 சதவீதம் அதிகரித்து ரூ. 346.5 கோடியாக பதிவாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், ரூ. 278.4 கோடியாக நிகரலாபம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிறுவனத்தின் வருமானமும், ரூ. 931.1 கோடியிலிருந்து ரூ. 1,298.2 கோடியாக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|