பதிவு செய்த நாள்
11 மே2011
09:35
நியூயார்க் : தகவல் தொழில்நுட்பத் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம், இந்தாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில், 2.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிகர வருமானமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில், 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களே நிகர வருமானமாக ஈட்டியிருந்தது. சதவீதத்தின் அடிப்படையில் இது 10 சதவீதம் அதிகம் ஆகும். ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே, இந்த வருமான அதிகரிப்பிற்கு காரணம் என ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம் 24.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளதாகவும், இதற்கு முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தில் இது 22.85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதன்மூலம் நிறுவனத்தின் வருமானம் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|