பதிவு செய்த நாள்
21 மே2011
09:58
பெங்களூரு : டாடா காபி லிமிடெட் நிறுவனம் தனது நிறுவன காபியை, அமெரிக்காவிலும் கிடைக்கும் வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கார்ப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக, பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்த டாடா காபி நிறுவன நிர்வாக இயக்குனர் ஹமீத் ஹக் கூறியதாவது, ஸ்டார்பக்ஸ் கார்ப் நிறுவனத்துடனான கைகோர்ப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இது அமலுக்கு வரஉள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த உடன்டிக்கையின் படி, டாடா காபி, அமெரிக்காவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ள தங்கள் நிறுவனம், அமெரிக்கா உள்ளி்ட்ட மேலைநாடுகளிலும் வெற்றிக்கொடியை நாட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|