வாடிக்கையாளர்களை கவர இந்தியன் வங்கி புதிய யுக்திவாடிக்கையாளர்களை கவர இந்தியன் வங்கி புதிய யுக்தி ... என்.எல்.சி., நிறுவனம் நிகர லாபம் ரூ.1,298 கோடி என்.எல்.சி., நிறுவனம் நிகர லாபம் ரூ.1,298 கோடி ...
ஐம்பது பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2011
00:16

சென்னை:பரஸ்பர நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய, 428 புதிய திட்டங்களில், 50 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு, அவை வெளியிடப்படும் போது இருந்ததை விட குறைந்துள்ளதாக, ஆய்வொன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பொதுவாக, ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற விலையில், இவை வெளியிடப்படுகின்றன. இத்திட்டங்களில் திரட்டப்படும் நிதி, பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில், முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் அடிப்படையில், நிகர சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது.இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட காலவரையற்ற முதலீடுகளைக் கொண்ட 428 திட்டங்களில், 50 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு குறைந்துள்ளது. அதாவது, இத்திட்டங்களில், வளர்ச்சிப் பிரிவின் கீழ், ஒரு யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு, வெளியீட்டு விலையான 10 ரூபாயை விட குறைந்துள்ளது. இந்த சரிவிற்கு, இத்திட்டங்கள் கடந்த 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது தான் காரணம். அதாவது, 2008ம் ஆண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், உலகளவில் பங்கு வியாபாரம் வீழ்ச்சி கண்டது. இதனால், பங்கு சார்ந்த பரஸ்பர முதலீட்டு திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு குறைந்து போனது என, பரஸ்பர நிதி திட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 41 பரஸ்பர நிதி நிறுவனங்களில், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் வெளியிட்ட திட்டங்கள் தான், அதிகளவில் நிகர சொத்து மதிப்பை இழந்துள்ளன. இந்நிறுவனம், பங்கு சார்ந்த 26 பரஸ்பர நிதி திட்டங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் 5 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு குறைந்துள்ளது. அடுத்த இடங்களில் எல் அண்டு டி மியூச்சுவல் பண்டு, எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.சதவீத அடிப்படையிலும், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் பங்கு சார்ந்த 5 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு, 19.2 சதவீதம் குறைந்துள்ளது. கோட்டக் மகிந்திரா மியூச்சுவல் பண்டு வெளியிட்ட 14 திட்டங்களில், 2 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு, 14.3 சதவீதம் குறைந்துள்ளது. பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் 27 திட்டங்களில், 3 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு, 11.1 சதவீதம் சரிந்துள்ளது. எஸ்.பீ.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் 18 திட்டங்களில், 2 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு 11.1 சதவீதம் குறைந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம், பங்கு சார்ந்த 28 பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 2 திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு 7.1 சதவீதம் குறைந்துள்ளது.சுந்தரம் மியூச்சுவல் பண்டு நிறுவனம் வெளியிட்ட 21 திட்டங்களில், ஒரு திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு 4.7 சதவீதம் குறைந்துள்ளது. டாட்டா மியூச்சுவல் பண்டு 24 திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு 4.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. இப்பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு காரணமாக, பரஸ்பர நிதி நிறுவனங்களின் திட்டங்களின் நிகர சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. ரிலையன்ஸ், டாட்டா, கோட்டக், ரெலிகேர், பார்தி உள்ளிட்ட நிறுவனங்களின் அடிப்படைக் கட்டுமானத் துறை சார்ந்த பரஸ்பர முதலீட்டு திட்டங்களின் நிகர சொத்து மதிப்பும் சரிவடைந்துள்ளது. இதில், ஜே.எம் கோர் 2 பரஸ்பர நிதி திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு மிக குறைவாக 3.67 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. எல் அண்டு டிஸ்மால் கேப் திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு 4.80 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதே போல், ரெலிகேர் ஏஜில் (6.51ரூபாய்), எல் அண்டு டி இன்ப்ராஸ்ட்ரக்சர் (6.65 ரூபாய்),ஜே.எம்.எமர்ஜிங் லீடர்ஸ் (6.99ரூபாய்),ரெலிகேர் ஏஜில் டேக்ஸ் (7.36ரூபாய்) ஆகிய நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. ஒரு சில பரஸ்பர நிதி நிறுவனங்கள், வித்தியாசமான திட்டங்களை வெளியிட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. யூ.டி.ஐ., பிராங்ளின் டெம்பிள்டன், டீ.எஸ்.பி பிளாக் ராக், எச்.டீ.எப்.சி., ஆகிய பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)