பதிவு செய்த நாள்
30 மே2011
10:58
புதுடில்லி, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் முன்னணி ரியாலிட்டி நிறுவனமான யூனிடெக் நிறுவனம், 16 சதவீதம் நிகரலாபம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, யூனிடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டில், நிறுவன நிகரலாபம் 15.9 சதவீதம் சரிவடைந்து (2009-10 ம் நிதியாண்டில் ரூ. 675.05 கோடி) ரூ. 567.66 கோடியாக பதிவாகி உள்ளது. நிறுவனத்தின் நிகரலாபம் சரிவடைந்திருந்த போதிலும், இந்த நிதியாண்டில் விற்பனை ஏற்றம் கண்டிருந்தது. 2009-10ம் நிதியாண்டில், ரூ. 2,931.33 கோடி என்ற அளவில் இருந்த விற்பனை, இந்த நிதியாண்டில் 8.7 சதவீதம் அதிகரித்து ரூ. 3,187.09 கோடியாக அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|