தமிழகம், கேரளாவில்முட்டை விலை231 காசாக நிர்ணயம் தமிழகம், கேரளாவில்முட்டை விலை231 காசாக நிர்ணயம் ... அடுத்த மாதம்மீண்டும் உயர்கிறதுபெட்ரோல் விலை அடுத்த மாதம்மீண்டும் உயர்கிறதுபெட்ரோல் விலை ...
ஈரோட்டில் மஞ்சள் விலை கடும் வீழ்ச்சி:குவிண்டாலுக்கு ரூ.1,342 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2011
00:36

ஈரோடு:ஈரோடு மஞ்சள் மார்க்கெட்களில், 2,000 குவிண்டால் வரத்து குறைந்த போதிலும், மஞ்சள் விலை தொடர் சரிவை சந்தித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளது.ஈரோட்டில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு சொசைட்டி மஞ்சள் மார்க்கெட், கோபி சொசைட்டி மஞ்சள் மார்க்கெட், ஓபன் (தனியார் வியாபாரிகள்) மார்க்கெட் என நான்கு மஞ்சள் மார்க்கெட் உள்ளது.தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூலம் தினமும், 6,000 குவிண்டால் மஞ்சள் ஈரோட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. தரம், ரகம் வாரியாக, 120 வகைகளாக பிரித்து, டெண்டர் மூலம் மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்து விற்கின்றனர்.கடந்தாண்டு மார்க்கெட்டில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்தது. 2010 டிசம்பரில் வரலாறு காணாத அளவு மஞ்சள் குவிண்டால், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. ஓரிரு வாரங்களுக்குப் பின் வரத்து அதிகரித்ததால், விலையில் சரிவை சந்தித்தது.ஒவ்வொரு வாரமும், 500 முதல், 700 ரூபாய் வரை குறைந்து, கடந்த நான்கு வாரங்களாக ஆயிரம் ரூபாய் வரை சரிந்தது.கடந்த வாரம் திங்கட்கிழமை ஈரோடு மஞ்சள் மார்க்கெட், ஈரோடு சொசைட்டி மஞ்சள் மார்க்கெட்டில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக, 8,082 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம், 7,399க்கும், கோபி சொசைட்டி மஞ்சள் மார்க்கெட்டில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம், 8,412க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம், 7,837 ரூபாய்க்கும் விற்பனையானது. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மஞ்சள் மார்க்கெட்டில், விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் 8,210 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 7,367க்கும் விற்கப்பட்டது. ஓபன் மார்க்கெட்டில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக 8,009க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் 7,084 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.நேற்று திங்கட்கிழமை மஞ்சள் மார்க்கெட்டில், ஈரோடு சொசைட்டி மஞ்சள் மார்க்கெட்டில், விரலி மஞ்சள் குவிண்டால், 6,011 முதல், 7,391 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால், 5,835 முதல், 6,679 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 797 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதில், 734 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன.கோபி சொசைட்டி மஞ்சள் மார்க்கெட்டில், விரலி மஞ்சள் குவிண்டால், 5,737 முதல், 7,169 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால், 4,672 முதல், 6,495 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. 243 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 231 மூட்டைகள் விற்கப்பட்டன.வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மஞ்சள் மார்க்கெட்டில், விரலி மஞ்சள் குவிண்டால், 6,971 முதல், 7,549 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால், 5,889 முதல், 6,395 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. 361 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்டு, 356 மூட்டைகள் விற்பனையானது.ஓபன் மஞ்சள் மார்க்கெட்டில், விரலி மஞ்சள் குவிண்டால், 5,950 முதல், 7,355 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால், 5,374 முதல், 6,385 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. 3,157 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த வார விலையை ஒப்பிடுகையில், விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு, 595 முதல், 1,043 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டாலுக்கு, 1,978 முதல், 1,342 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும், கடந்த வாரம் விற்பனைக்கு, 6,614 குவிண்டால் விற்பனைக்கு வந்திருந்தது.ஆனால், இந்த வாரம், 4,558 குவிண்டால் மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. வரத்து குறைந்துள்ள நிலையில், மஞ்சள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)