பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:40
சென்னை:ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 16 ஆயிரத்து 928 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,116 ரூபாய்க்கும் விற்பனையானது.பங்கு சந்தை சரிவு; தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பு; அமெரிக்க டாலர் மற்றும் யூரோவின் மதிப்பு ஏற்ற, இறக்கம் ஆகிய காரணங்களால் ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை அடைந்தது. கடந்த 3ம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரன் 16 ஆயிரத்து 984 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,123 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வார இறுதியில் சவரனுக்கு 136 ரூபாய் வரை குறைந்து, 16 ஆயிரத்து 848 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,106 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை நிலவரப்படி சவரனுக்கு, 104 ரூபாய் வரை அதிகரித்து, 16 ஆயிரத்து 952 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,119 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் சவரனுக்கு 24 ரூபாய் வரை குறைந்து, 16 ஆயிரத்து 928 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,116 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு 80 ரூபாய் வரை அதிகரித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|