சந்தைக்கு 2.25கோடி பருத்தி பொதி வரத்துசந்தைக்கு 2.25கோடி பருத்தி பொதி வரத்து ... திரைப்பட தயாரிப்புக்கு கடன் வழங்க வங்கிகள் ஆர்வம் திரைப்பட தயாரிப்புக்கு கடன் வழங்க வங்கிகள் ஆர்வம் ...
ஆப்பிளின் 'ஐ கிளவுட்' சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2011
00:00

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம், அதன் மின்னணு சாதனங்களில், இணையம் வாயிலாக பலதரப்பட்ட மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் 'ஐ கிளவுட்' சேவையை, சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச மென்பொருள் வல்லுனர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், 'ஐ கிளவுட்' சேவையை அறிமுகப்படுத்தினார். ஆப்பிள் நிறுவனம் 'ஐ மேக்' கம்ப்யூட்டர், 'ஐ போட்' இசை சாதனம், 'ஐ ட்யூன்' இசை நூலகம், 'ஐ போன்' மொபைல் போன், 'ஐ பாட்' கையடக்க கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை தயாரித்து விற்பனை செ#து வருகிறது.இந்த, அனைத்து சாதனங்களுக்கும் தேவையான மென்பொருள்கள், இசை, படங்கள், விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை, 'ஐ கிளவுட்' எனப்படும் மெய்நிகர் செர்வர் வாயிலாக பதிவிறக்கி பயன்படுத்தலாம். இணையதளம் வாயிலானஇச்சேவையை 'வை பை' வசதி உள்ள எந்தஇடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துவோர் 'ஐ கிளவுட்' சேவையை இலவசமாக பெறலாம். எனினும், பதிவிறக்கப்படும் பாடல்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, 'ஐ கிளவுட்' சேவை மூலம் 'ஐ ட்யூன்' நூலகத்தில் உறுப்பினரானால், ஆண்டுக்கு 25 டாலர் கட்டணத்தில், 1.80 கோடி பாடல்களை பதிவிறக்கி கேட்டு ரசிக்கலாம். மேலும், இப்பாடல்களை, இதர ஆப்பிள் சாதனங்களில் நொடிப்பொழுதில் பரிமாறிக் கொள்ளும்வசதியும் உள்ளது.ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே அறிமுகப்படுத்திய 'மொபைல் மீ' என்ற மெய்நிகர் செர்வர் (கிளவுட் கம்ப்யூட்டிங்) சேவையை விட 'ஐ கிளவுட்' மேம்பட்ட வசதிகள் கொண்டது. சோதனை அடிப்படையிலான இச்சேவை, அதிகாரபூர்வமாக வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)