2012ம் ஆண்டிற்குள் 73 ஆயிரம் கிராமங்களுக்கு வங்கிச்சேவை : பிரணாப்2012ம் ஆண்டிற்குள் 73 ஆயிரம் கிராமங்களுக்கு வங்கிச்சேவை : பிரணாப் ... உளுந்து விலை குறைந்தது உளுந்து விலை குறைந்தது ...
உயர்ந்தது கடலை எண்ணெய்விலை இறக்குமதியால் படுத்தது பாமாயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2011
01:06

விருதுநகர்: கடலை எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், இறக்குமதியால் பாமாயில் விலை குறைந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில், சர்க்கரை விலை மூடைக்கு 2770, கடலெண்ணெய் டின்னுக்கு 1380 லிருந்து 1450ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் 1170 லிருந்து 1190 ஆகவும் உயர்ந்துள்ளது. பாமாயில் 945 லிருந்து 925 ரூபாயாக குறைந்துள்ளது. நிலக்கடலைப்பருப்பு 4300 லிருந்து 4600 ஆகவும், கடலைப் புண்ணாக்கு மூடை 2900 லிருந்து3100 ஆகவும் உயர்ந்துள்ளது. எண்ணெய் மார்க்கெட்டில், நிலக்கடலை பருப்பு வரத்து குறைந்துள்ளதால் கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 'பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது,' என எண்ணெய் வியாபாரிகள் தெரிவித்தனர். விருதுநகரில் உளுந்து விலை மூடைக்கு 4900 லிருந்து 4800 , சுமார் ரக உளுந்து 4100 லிருந்து 4900 , பர்மா பருவட்டு உளுந்து 5100 லிருந்து 4900 , நயம் உளுந்தம் பருப்பு 6400, பர்மா பருவட்டு பருப்பு 6200 ரூபாயாக உள்ளது. துவரை 3800 லிருந்து 3600, பொடி துவரை 3000 ரூபாயாக உள்ளது. துவரம் பருப்பு 5600, பொடி துவரம் பருப்பு 4600 ரூபாயாக உள்ளது. பாசிப்பயறு 6400, லயன் பருவட்டு 3900,சுமார் ரகம் 3700 ரூபாயாக உள்ளது. பாசிப்பருப்பு 5100, சுமார் ரகம் 4700 ரூபாயாக உள்ளது. 'பருப்பு மார்க்கெட் நிலையாக இருப்பதால் மாற்றங்கள் ஏதும் இல்லை,' என வியாபாரிகள் தெரிவித்தனர். மைதா 2180, ரவை 2180லிருந்து 2300 ஆக உயர்ந்துள்ளது. கொண்டைக் கடலை 2850, பொரிகடலை 2130 லிருந்து 2180 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய் புது வத்தல் 7800 லிருந்து 8200ரூபாயாகவும், சுமார் ரகம் 7200 லிருந்து 7800 ரூபாயாகவும், முண்டு வத்தல் 7000 லிருந்து 7500 ஆகவும் உள்ளது. சோடை வத்தல் 3400 ரூபாயாகவும், பழைய சோடை வத்தல் 2600 ரூபாயாகவும் உள்ளது. 'வத்தல் வரத்து குறைந்து வருவதால், இதன் விலை விலை உயர வாய்ப்புள்ளதாக' வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)