பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
13:17
புதுடில்லி : இந்தியாவில் பிளேபுக் மற்றும் ஃபிளையர் வெற்றியைத் தொடர்ந்து, டேப்லெட் பிசி சந்தையில் களமிறங்க உள்ளதாக மோட்டரோலோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மோட்டரோலோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஜூம்' என்ற பெயரிலான இந்த டேப்லெட் பிசி, மற்ற டேப்லெட் பிசிக்களைவிட அளவில் சிறியதாகவும், கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் அதிவேக திறனையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட டேப்லெட் பிசி, 10.1 இஞ்ச் ஹை-டெபனீசன் டிஸ்பிளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் புராசசர், பினபக்க 5 மெகாபிக்சல் கேமரா, முன்பக்க 2மெகாபிக்சல் கேமரா உள்ளி்ட்ட சிறப்பம்சங்களுடன் வை பை வசதியுடன் கூடிய டேப்லெட் பிசியின் விலை ரூ. 32,990 என்றும், 3ஜி வசதி கொண்ட டேப்லெட் பிசியின் விலை ரூ. 39,990 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூம் டேப்லெட் பிசி, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப், பிளாக்பெர்ரி பிளேபுக், ஹெச்டிசி ஃபிளையர் மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹூவாவே மீடியாபேட்டிற்கு கடும்போட்டியாக அமையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|