எஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டணங்களை உயர்த்தியது டொகாமோஎஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டணங்களை உயர்த்தியது டொகாமோ ... ரிலையன்ஸ் நிறுவனத்தால் 'சென்செக்ஸ்' 83 புள்ளிகள் சரிவு ரிலையன்ஸ் நிறுவனத்தால் 'சென்செக்ஸ்' 83 புள்ளிகள் சரிவு ...
நாட்டின் ஏற்றுமதி 57 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2011
00:10

புதுடில்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவைப்பாட்டால், சென்ற மே மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 56.9சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,590 கோடி டாலராக (1 லட்சத்து 19 ஆயிரத்து 140 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.அதேசமயம், நாட்டின் இறக்குமதியும், 54.08 சதவீதம் உயர்ந்து, 4,090 கோடி டாலராக ( 1 லட்சத்து 88 ஆயிரத்து 140 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1,490 கோடி டாலராக (68 ஆயிரத்து 540 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாட்டின் வர்த்தக பற்றாக்குறை என்பது, ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகமாக இருக்கும் நிலையை குறிக்கிறது.இது குறித்து வர்த்தக செயலர் ராகுல் குல்லார் கூறுகையில், 'கடந்த நான்கு ஆண்டுகளை காட்டிலும், சென்ற மே மாதத்தில் தான் மிக அதிகளவிற்கு பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.மே மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 18.57 சதவீதம் அதிகரித்து, 1,010 கோடி டாலராக (46 ஆயிரத்து 460 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 850 கோடி டாலராக (39 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) இருந்தது. இதே மாதங்களில், எண்ணெய் சாராத பொருள்களின் இறக்குமதியும், 71 சதவீதம் அதிகரித்து, 1,790 கோடி டாலரிலிருந்து (82 ஆயிரத்து 340 கோடி ரூபாய்), 3,070 கோடி டாலராக (1 லட்சத்து 41 ஆயிரத்து 220 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 45.28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,970 கோடி டாலராக (2 லட்சத்து 28 ஆயிரத்து 620 கோடி ரூபாய்) உள்ளது. அதேநேரத்தில், இறக்குமதியும் 33.3 சதவீதம் அதிகரித்து, 7,370 கோடி டாலராக(3 லட்சத்து 39 ஆயிரத்து 20 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல் - மே) நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 2,390 கோடி டாலராக (1 லட்சத்து 9, 940 கோடி ரூபாய்) உள்ளது.கடந்த 2010-11ம் முழு நிதியாண்டில், நாட்டின் மொத்த ஏற்றுமதி 37.55 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 ஆயிரத்து 600 கோடி டாலராக (11 லட்சத்து 31 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) இருந்தது.அதேசமயம், நாட்டின் மொத்த இறக்குமதி, 21.6 சதவீதம் சரிவடைந்து, 35 ஆயிரம் கோடி டாலராக (16 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது.அந்நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 10 ஆயிரத்து 400 கோடி டாலராக (4 லட்சத்து 78 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)