பெட்ரோல் விலை ரூ 120 ஆக உயர்வுபெட்ரோல் விலை ரூ 120 ஆக உயர்வு ... மிச்செலின் இந்தியா சென்னை ஆலையில் பயிற்சி திட்டம் மிச்செலின் இந்தியா சென்னை ஆலையில் பயிற்சி திட்டம் ...
வணிக மலர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2011
00:16

ஐ.டீ.பீ.ஐ பெடரல் ஐ.டீ.பீ.ஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், மூத்த குடிமக்களுக்கென்று பிரத்யேகமாக 'டெர்ம்சூரன்ஸ் சீனியர்ஸ்' என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ பரிசோதனை இல்லாமல், இந்த காப்பீட்டு திட்டத்தில் 50 - 85 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் மாதம் ரூ.100 பிரிமியம் செலுத்தும் வசதியுள்ள இத்திட்டம், வரிச்சலுகைக்கு உட்பட்டது. --------------------- என்.ஐ.ஐ.டி. நிறுவனம் இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறையில், பணி சார்ந்த கல்வி பயிற்சியை வழங்கும் நோக்கில், ஐ.பீ.எம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், ஐ.பீ.எம் வழங்கும் பணி சார்ந்த திட்டங்களில், பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு என்.ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கிடைக்கும். பயிற்சியை சிறப்பாக முடித்த மாணவர்களுக்கு ஐ.பீ.எம் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், அவர்கள் சுலபமாக வேலைவாய்ப்பை பெற முடியும். ------------- எல் அண்டு டி பைனான்ஸ் லார்சன் அண்டு டூப்ரோ குழுமத்தைச் சேர்ந்த, எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, 1,750 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இப்புதிய பங்கு வெளியீடு, வரும் 19ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ------------------ ஆடி இந்தியா நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம், சொகுசு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன் துணை நிறுவனமான ஆடி இந்தியா,சென்ற ஜூன் மாதம் வரையிலான, முதல் ஆறு மாதங்களில், 2,802 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே ஆறு மாத காலத்தில், 1,400 ஆக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை சென்ற ஆண்டை விட, 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)