பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:14

சிங்கப்பூர்: இந்தியா - சிங்கப்பூர் இடையிலான பரஸ்பர ஏற்றுமதி, நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, சிங்கப்பூர் அர” தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி 48 சதவீதம் அதிகரித்து, 934 கோடி டாலராக (42 ஆயிரத்து 964 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 630 கோடி டாலராக (28 ஆயிரத்து 980 கோடி ரூபாய்) இருந்தது.இதே காலத்தில், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து, 860 கோடி டாலரிலிருந்து ( 39 ஆயிரத்து 560 கோடி ரூபாய்), 975 கோடி டாலராக (44 ஆயிரத்து 850 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இதே காலத்தில், சிங்கப்பூர் நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரித்து, 23 ஆயிரம் கோடி டாலரிலிருந்து, 25 ஆயிரத்து 300 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், இந்நாட்டின் இறக்குமதி 9.25 சதவீதம் உயர்ந்து, 20 ஆயிரத்து 718 கோடி டாலரிலிருந்து, 22 ஆயிரத்து 635 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|