பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:13

புதுடில்லி,: அதிகரித்து வரும் பணவீக்கத்தால், இந்திய நுகர்@வார் தங்கள் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துக் கொண்டுள்ளதாக ஆ#வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீல்சன் இந்தியா நிறுவனம், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், உலக மக்களின் சேமிப்பு,செலவழிப்பு,நம்பிக்கை உள்ளிட்டவை குறித்து இணைய தளம் வாயிலாக கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், 56 நாடுகளைச் சேர்ந்த 31 ஆயிரம் நுகர்வோர் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில், 56 சதவீத இந்தியர்கள், பொருள்களை வாங்க இது@வ நல்ல சமயம் என்று தெரிவித்துள்ளனர். சென்ற ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில், இதே கருத்தை தெரிவித்தோரின் எண்ணிக்கை 61 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதே போல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களில், இந்தியர்களின் நம்பிக்கை 5 புள்ளிகள் குறைந்து, 131 புள்ளிகளில் இருந்து 126 புள்ளிகளாக சரிந்தது.கையிருப்பில் உள்ள உபரித்தொகை குறைந்துள்ளதாலும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வாலும்,சேமிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தோர் சதவீதம் 65ல் இருந்து 54 ஆக குறைந்துள்ளது.உலகளவில், சேமிப்பு, செலவழிப்பு, நம்பிக்கை உள்ளிட்டற்றில் பிலிப்பைன்ஸ் 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், இந்தோனேஷியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|